"இதை உருவாக்குனவரை பார்க்கணும்".. ட்ரக்கை கல்யாண மண்டபமாக மாற்றிய நபர்.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த Cool வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். வாகனங்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் ட்ரக்கை மொபைல் திருமண மண்டபமாக மாற்றி பயன்படுத்தும் இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Advertising
>
Advertising

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

மொபைல் திருமண ஹால்

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் வாகனங்களை ஏற்றிச் செல்லும் ட்ரக்கை மொபைல் திருமண மண்டபமாக மாற்றியிருக்கிறார்கள். இதனுள் ஏசி பொருத்தப்பட்டிருக்கிறது. பக்கவாட்டில் இருந்து திறக்கும் தற்காலிக சுவர்களை நகர்த்தி விருந்தினர்கள் அமரும் அறை நெடிப் பொழுதில் தயாராகிறது. இதனுள் 200 பேர் அமரலாம் என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 40x30 சதுர அடி கொண்ட இந்த மொபைல் ஹாலில் பர்னிச்சர்களும் இருக்கின்றன.

அவரை பார்க்கணும்

இந்த மொபைல் திருமண மகாலின் வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா,"இந்த தயாரிப்பின் கான்செப்ட் மற்றும் வடிவமைப்பின் பின்னணியில் உள்ள நபரை நான் சந்திக்க விரும்புகிறேன். சிந்தனைமிக்க படைப்பு. தொலைதூர இடங்களுக்கு உகந்தது. அதுமட்டும் அல்லாமல் மக்கள் தொகை அடர்ந்த நாட்டில் நிரந்தர இடம் தேவைப்படாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த கண்டுபிடிப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த மொபைல் திருமண மண்டபத்தின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

 

ANANDMAHINDRA, MARRIAGEHALL, VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்