"இந்த Photo-க்குள்ள டைவ் அடிக்க தோனுது".. ஆனந்த் மஹிந்திராவின் வைரல் பதிவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா போட்டுள்ள ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | மண்டை மேல இருந்த கொண்டைய மறந்த திருடன்.. வழக்கை முடிச்சுவச்ச ஒரேயொரு போட்டோ..!

பெரும்பாலான மக்களுக்கு பயணங்கள் மீது மிகுந்த ஆர்வம் இருக்கிறது. புதிய இடங்கள், புதிய நிலப்பரப்புகளை காணும் வேட்கை மனிதர்களிடையே பழங்காலமாகவே இருந்து வருகிறது. இயற்கை சார்ந்த சூழலில் பயணம் அமைய விருப்பப்படும் மக்கள் மரங்கள் அடர்ந்த சாலைகளையே பெரிதும் தேர்ந்தெடுக்கின்றனர். அப்படியான பாதைகளில் ஒன்றுதான் கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் இருந்து உடுப்பி செல்லும் பாதை. இருமருங்கிலும் அடர்ந்த மரங்களுடன் நீளும் இந்த சாலை சுற்றுலாவாசிகளை கவர்ந்து இழுக்கிறது.

இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா இந்த சாலையின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

டைவ் அடிக்க தோணுது

சுற்றுலாவாசிகளிடையே பிரபலமான பெங்களூரு - உடுப்பி சாலையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா அதில்," அழகு. இந்த புகைப்படத்திற்குள் டைவ் அடிக்க இது தூண்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த பதிவில், மஹாராஷ்டிராவில் உள்ள கோண்டியா - கோமாரா இடையேயான சாலை இதேபோன்று அழகாக இருக்கும் என ஒருவர் கமெண்ட் செய்ய, பலரும் தங்களது பயண அனுபவத்தில் பார்த்த அழகான சாலைகள் பற்றி தற்போது கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Also Read | வாட்சாப்பில் லட்ச கணக்கில் பணம் கேட்ட மகள்.. அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. "குட்நைட்" மெசேஜால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!

ANAND MAHINDRA, JUNGLE DRIVE, BENGALURU TO UDUPI, ஆனந்த் மஹிந்திரா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்