"இதுக்கு ஒரு Solution சொல்லுங்கப்பா".. ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்த ஆங்கில வார்த்தை.. ஓஹோ இவ்வளவு அர்த்தம் இருக்கா இதுக்கு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா, 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆங்கில வார்த்தை குறித்து வெளியிட்டுள்ள பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
சொல்
இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஆங்கில வார்த்தை மற்றும் அதற்குரிய பொருளையும் பதிவிட்டிருக்கிறார். அதில் spuddle என்ற வார்த்தைக்கான அர்த்தம் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தை 17 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற வினைச்சொல் என்றும் இதன் பொருளாக "உங்கள் மனம் வேறு இடத்தில் இருப்பதால் அல்லது நீங்கள் விழிப்புடன் இல்லை என்பதால் பலவீனமாகவும் பயனற்றதாகவும் வேலை செய்வது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்வுகள்
இந்த பதிவை பகிர்ந்திருக்கும் மஹிந்திரா பொதுவாக வாரத்தின் நடுப்பகுதியில் பெரும்பாலானோர் இதேபோல வேலை செய்வதாகவும், அதில் இருந்து விடுபட வழிகளை பரிந்துரைக்குமாறும் குறிப்பிட்டிருக்கிறார். அந்த பதிவில்,"இந்த வார்த்தைக்கு மறுமலர்ச்சி தேவை. இது வாரத்தின் நடுப்பகுதியில் மற்றும் கொரோனா தொற்றுநோய்க்கு பிந்தைய காலங்களில் நடக்கிறது. வேலையில் இருக்கும் ‘spuddle’ தருணத்தில் இருந்து எப்படி விரைவாக வெளியேறுவது என்பதற்கான தீர்வுகள் வரவேற்கப்படுகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலாக பரவி வந்த நிலையில், நெட்டிசன்கள் இதுகுறித்த கருத்துகளை கமெண்டாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்த பதிவில் ஒருவர்,"என்னுடைய தற்போதைய சூழ்நிலையை விவரிக்கும் சொல் இது" என கமெண்ட் செய்திருக்கிறார். இன்னொருவர்,"மனிதர்கள் ஒன்றும் ரோபோட்கள் அல்ல. எப்போதாவது இப்படியான சூழ்நிலை வரலாம். ஆனால் அதுவே வழக்கமாகிவிடக்கூடாது" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இப்படி நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துக்களை கமெண்டாக பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இப்படி ஒரு திறமையா.?".. விநாயகர் சிலைகளை தத்ரூபமாக உருவாக்கும் சிறுவன்.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ..!
- "நகரத்தின் ஆன்மா இந்த இடம் தான்".. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆனந்த் மஹிந்திரா போட்ட பதிவு.. வைரலாகும் வீடியோ..!
- "சில சமயங்கள்ல நாமும் இந்தமாதிரி முடிவை எடுக்கணும்".. தகர்க்கப்பட்ட இரட்டை கோபுரங்கள் மூலமாக ஆனந்த் மஹிந்திரா சொன்ன மேசேஜ்.. !
- "இந்த பையனுக்கு ஹெல்ப் பண்றது பாக்கியம்".. ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்த மாணவன்.. இப்போ வேற லெவலுக்கு போய்ட்டாரு.. அவரே பகிர்ந்த சூப்பர் தகவல்..!
- "நீங்க மரங்களை வெட்டணும்ன்னு நெனச்சா".. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வைரல் வீடியோ.. "Karma'னா இதான் போல"
- "இந்த பையன கண்டுபிடிங்க பா".. தமிழக இளைஞரை வலைவீசி தேடும் ஆனந்த் மஹிந்திரா.. மிரள வைத்த பின்னணி!!
- Games of Thrones-ஐ ஒப்பிட்டு பிரக்ஞானந்தாவை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.. வைரலாகும் 'கேப்ஷன்'!!
- 'Vacation க்கு இங்க போகணும்னு ஆசை".. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த அட்டகாசமான வீடியோ.. அடடா இதான் காரணமா.?
- "அவர்கிட்ட இருந்து இது ஒன்ன மட்டும் கத்துக்கோங்க".. மறைந்த முதலீட்டு ஜாம்பவான் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா குறித்து ஆனந்த் மஹிந்திரா உருக்கம்..!
- "Car'அ இப்டி கூட Use பண்ணலாம் போலயே!!".. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வைரல் வீடியோ!!..