"நகரத்தின் ஆன்மா இந்த இடம் தான்".. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆனந்த் மஹிந்திரா போட்ட பதிவு.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையின் பிரபல இடம் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | வரலாறு காணாத பேய்மழை.. "3 ல ஒருபங்கு நிலம் தண்ணில இருக்கு".. பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பால் அதிர்ந்துபோன மக்கள்..!

விநாயகர் சதுர்த்தி

இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை நடைபெற இருக்கிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்திக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபட இருக்கிறார்கள். பொதுவாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பெரும்பாலான வீடுகளில் சிறிய வடிவிலான மண் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கமாகும். அதன் பிறகு அருகில் உள்ள நீர்நிலைகளில் அதனை கரைப்பது வழக்கம். சிலர் தங்கள் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெரிய வடிவிலான விநாயகர் சிலைகள் கரைக்க கொண்டு செல்லும் போது, அந்த வாகனங்களில் தங்களது விநாயகர் சிலைகளையும் சேர்த்து அனுப்புவார்கள்.

லால்பாக்சா ராஜா

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற லால்பாக்சா ராஜா பகுதியில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இங்கே விநாயகர் சதுர்த்தி விழாவை காண ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடுவது வழக்கமாகும். இந்த ஆண்டு 12 அடி உயரத்தில் விநாயகர் சிலையானது உருவாக்கப்பட்டிருக்கிறது. நேற்று இந்த சிலை பொதுமக்களின் முன்பு திறக்கப்பட்டது. இதனை காண ஏராளமான மக்கள் அங்கே திரண்டிருந்தனர். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், லால்பாக்சா ராஜா பகுதி குறித்து ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில்,"மும்பையின் இதயத்தையும் ஆன்மாவையும் லால்பாக்சா ராஜாவை விட வேறு எதுவும் சிறப்பாக வெளிப்படுத்திவிட முடியாது. கணபதி பாப்பா மோரியா" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் தங்களது வீடுகளில் வைத்துள்ள விநாயகர் சிலைகளை புகைப்படம் எடுத்து கமெண்ட் பகுதியில் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read | எதே கல்யாண பந்தியில் கலவரமா.. இளைஞரின் திருமணத்தில் நண்பர்கள் வச்ச கட் அவுட்.. அந்த பலகாரம் மேட்டர் இருக்கே.. !

ANAND MAHINDRA, LALBAUGCHA RAJA, GANESH CHATURTHI, ANAND MAHINDRA POST ABOUT LALBAUGCHA RAJA, ஆனந்த் மஹிந்திரா, விநாயகர் சதுர்த்தி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்