"பயத்தையும் பிரச்சனைகளையும் இப்படி டீல் பண்ணுங்க".. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த சூப்பர் வீடியோ.. !

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா, நம்முடய பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களை கையாள்வது எப்படி என்பதை விளக்கும் விதமாக வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "இந்திய அணிக்கு நிச்சயம் திரும்புவேன்.. என் பையோ பிக் படத்தில் இவர்தான் ஹீரோ".. மனம் திறந்த நடராஜன்..!

வழக்கமாக 'Monday motivation' என்ற ஹேஷ்டாக்கில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் உத்வேகம் அளிக்கக்கூடிய பதிவுகளை அல்லது வீடியோக்களை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். இது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இவரை 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் ஒரு நிஜ விமானம் பறந்து வருவது போல இருக்கிறது. கடைசியில் அது ஒரு பொம்மை விமானம் என்பது தெரிய வருகிறது. அதனை மாடியில் நிற்கும் சிலர் கேட்ச் பிடிப்பதும் தெரிகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து ஆனந்த் மஹிந்திரா,"இது என்னை கடைசியில் ஏமாற்றிவிட்டது. இதனால் கற்றுக்கொண்டது என்ன? நம்முடைய பிரச்சனைகள் மற்றும் அச்சங்களை உண்மையில் இருப்பதை விட பெரிதாக்குகிறோம். தீர்வுகள் எப்போதும் நம் பிடியில் இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதுவரையில் இந்த வீடியோவை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர்.

 

Also Read | திண்டுக்கல் டு கேரளா.. பசியுடன் 300 கிமீ நடந்து போன நபர்.. கலங்க வச்ச பின்னணி..!

ANAND MAHINDRA, ANAND MAHINDRA MONDAY MOTIVATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்