'Vacation க்கு இங்க போகணும்னு ஆசை".. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த அட்டகாசமான வீடியோ.. அடடா இதான் காரணமா.?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் படுவைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | 5 நாள் அடைமழை வெளுத்து வாங்கப்போகுது.. அதுவும் இந்த மாவட்டங்கள்ல கனமழை இருக்குமாம்.. வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை..!

வழக்கமாக 'Monday motivation' என்ற ஹேஷ்டாக்கில் ஒவ்வொரு திங்கட் கிழமையும் உத்வேகம் அளிக்கக் கூடிய பதிவுகளை அல்லது புகைப்படங்களை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் ஆனந்த் மஹிந்திரா இன்று புதிய வீடியோ ஒன்றினை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

வைரல் வீடியோ

இந்த வீடியோவில் ட்ரினிடாட் என்னும் தீவை சேர்ந்த ரேமண்ட் மற்றும் திலேநாடன் என்னும் இசைக் கலைஞர்கள் பழைய பாலிவுட் பாடல்களின் பாடல்களை பாடுகின்றனர். இதில், பாலிவுட் உலகின் ஜாம்பவான்களான ஆஷா போஸ்லே, முகமது ரஃபி மற்றும் கிஷோர் குமார் ஆகியோரது பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்நிலையில், இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா,"இது வழக்கமான Monday Motivation-ல் இருந்து மாறுபட்டது. ஆனால் வாரத்தை துள்ளலான இசையுடன் துவங்க இது உதவும் என உறுதியளிக்கிறேன். டிரினிடாட் எனது விடுமுறை இடத்திற்கான விருப்பப் பட்டியலில் முதலிடத்தினை பிடித்திருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | "அவர்கிட்ட இருந்து இது ஒன்ன மட்டும் கத்துக்கோங்க".. மறைந்த முதலீட்டு ஜாம்பவான் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா குறித்து ஆனந்த் மஹிந்திரா உருக்கம்..!

ANAND MAHINDRA, ANAND MAHINDRA MONDAY MOTIVATION, TRINIDAD VACATION, ANAND MAHINDRA TWEETS, ஆனந்த் மஹிந்திரா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்