"கடவுள் இங்கே இருக்கார்".. விளம்பர பலகையில் எழுதப்பட்டிருந்த வாசகம்.. ஆனந்த் மஹிந்திரா போட்ட கமெண்ட்.. வைரல் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also read | VIDEO: அணிக்கே வினையான கேப்டன் பாபர் அசாமின் செயல்.. 5 ரன்கள் பெனால்டி.. சொல்லவே இல்ல.. இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா? WIVsPAK ODI

வழக்கமாக 'Monday motivation' என்ற ஹேஷ்டாக்கில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் உத்வேகம் அளிக்கக்கூடிய பதிவுகளை அல்லது புகைப்படங்களை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவின் ப்ரூக்ளின் பகுதியில் உள்ள சாலை ஒர இரும்பு கம்பத்தில் எழுதப்பட்டுள்ள வாசகத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் ஆனந்த் மஹிந்திரா. இதற்கு அவர் போட்டுள்ள கமெண்ட் தான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

வைரல் ட்வீட்

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்தில் "மெசியா இங்கே இருக்கிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மஹிந்திரா தனது பதிவில் ,"இது அமெரிக்காவின் ப்ரூக்ளின் மாகாணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். 'Monday motivation பல்வேறு வகைகளில் நமக்கு கிடைக்கும். நம் ஒவ்வொருவருக்குள்ளும் நமது மெசியாக்கள் இருக்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்னும் பொருள்படும்படி ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் நெட்டிசன்கள்,"அற்புதமான கருத்து. உத்வேகத்தினை வெளியில் தேடாமல் நமக்குள்ளேயே ஒவ்வொருவரும் தேடுதல் வேண்டும்" என்றும்,"இந்த வாரத்தினை உங்களது இந்த செய்தியோடு துவங்குகிறேன்" என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Also Read | "மேட்ச் Tight ஆகும்போது அவர் பயந்துடறாரு".. ரிஷப் பண்டை விமர்சித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்..!

ANAND MAHINDRA, MONDAY MOTIVATION TWEET, ANAND MAHINDRA MOTIVATION TWEET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்