"இவர ஒலிம்பிக்கு அனுப்புனா தங்கம் நிச்சயம்".. மிரள வச்ச waiter.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உணவு பரிமாறுபவர் ஒருவரின் திறமையை வியந்து இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | அடக்கடவுளே.! கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் அக்கவுண்டில் இருந்து மாயமா.? .. என்ன நடந்தது? - உடைக்கும் உசைன் போல்ட்..!

பொதுவாக ஒவ்வொரு வேலையிலும் தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்துபவர்கள் மட்டுமே, அதில் சிறந்து விளங்க முடியும். சவால்களை தங்களது வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்ற தெரிந்தவர்கள் அதில் எளிதில் வெற்றியும் பெறுகிறார்கள். அந்த வகையில் உணவு பரிமாறும் நபர் ஒருவர் வித்தியாசமான முறையில் உணவு பரிமாறும் வீடியோவை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் அந்நபருடைய முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இவரை 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோவில் ஒருவர் உணவு பரிமாற தயாராகிறார். தோசைகளை பணியாளர் ஒருவர் தட்டுகளில் அடுக்க, இந்த பணியாளர் அதனை தனது கையில் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்குகிறார். அதன்பிறகு உணவுக்காக காத்திருக்கும் நபர்களுக்கு அதனை ஒவ்வொரு தட்டாக பரிமாறவும் செய்கிறார். இப்படி உணவகத்தில் காத்திருக்கும் அனைவர்க்கும் நொடி நேரத்தில் உணவு சென்றுசேர்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா,"வெயிட்டர் புரொடக்டிவிட்டி (Waiter Productivity)-யை ஒலிம்பிக் விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும். இந்த ஜென்டில்மேன் அதில் தங்கத்திற்கான கடும் போட்டியாளராக இருப்பார்" என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ வைரலாக பரவிவரும் நிலையில், பலரும் இந்த ஊழியரின் திறமையை பாராட்டி வருகின்றனர்.

Also Read | "25 வயசு வரைக்கும் என் டயட் இப்படித்தான்".. விராட் கோலி பகிர்ந்த சீக்ரட்.. வைரல் வீடியோ..!

ANAND MAHINDRA, WAITER, WAITER PRODUCTIVITY SKILLS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்