"இந்த பையன கண்டுபிடிங்க பா".. தமிழக இளைஞரை வலைவீசி தேடும் ஆனந்த் மஹிந்திரா.. மிரள வைத்த பின்னணி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.

Advertising
>
Advertising

அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.

இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.

அந்த வகையில், தமிழக இளைஞர் ஒருவரின் செயலை பார்த்து வியப்பில் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த ட்வீட் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

கவுதம் என்ற தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த ட்வீட் ஒன்றில், தான் உருவாக்கிய எலக்ட்ரிக் ஜீப் தொடர்பாக வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். மேலும், "எலக்ட்ரிக் ஜீப்பில், நாங்கள் முன் சக்கரம் மற்றும் பின் சக்கரத்தை தனித்தனியாக கட்டுப்படுத்துகிறோம். தயவு செய்து எனக்கு வேலை கொடுங்கள் சார்" என குறிப்பிட்டிருந்தார்.

அந்த வீடியோவின் அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர் கவுதம் என்பது தெரிய வரும் நிலையில், அங்கிருந்த வாலிபர் ஒருவரின் திறன் பலரையும் வியக்க வைத்திருந்தது.


தொடர்ந்து, இதனை கவனித்த தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்து, கேப்ஷனில், "இதனால் தான் இந்தியா எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் என நான் நம்புகிறேன். கார்கள் மற்றும் தொழில் நுட்பத்தின் மீதான மக்களின் ஆர்வம் காரணமாக தான், ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தியது என நம்புகிறேன். கவுதம் மற்றும் அவரது குழுவினர் வலு அடையட்டும்" என குறிப்பிட்ட ஆனந்த் மஹிந்திரா, @Velu_Mahindra-வினை டேக் செய்து, கவுதமை அணுக வேண்டியும் அறிவுறுத்தி உள்ளார்.

 

தமிழக இளைஞரின் செயலைக் கண்டு வியந்து போன ஆனந்த் மஹிந்திரா, அவரை அணுகவும் வழிகளை கேட்டுள்ளது தற்போது பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

ANAND MAHINDRA, EV CARS, INNOVATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்