"இந்த பையனுக்கு ஹெல்ப் பண்றது பாக்கியம்".. ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்த மாணவன்.. இப்போ வேற லெவலுக்கு போய்ட்டாரு.. அவரே பகிர்ந்த சூப்பர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா மாணவர் ஒருவரை பற்றிய தகவலை பகிர்ந்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | வீடா இல்ல சொர்க்கமா..? மகனுக்காக அம்பானி வாங்கிய சொகுசு வில்லா.. உள்ள இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

ஆனந்த் மஹிந்திரா 

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

 

உதவி

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆனந்த் மஹிந்திரா மாணவர் ஒருவருடைய வீடியோவை பகிர்ந்திருந்தார். மணிப்பூரை சேர்ந்த பிரேம் எனும் அந்த மாணவர் பழைய பொருட்களை வைத்து அயன்மேன் உபயோகிக்கும் உடையை உருவாக்கி அனைவரையும் திகைப்படைய செய்தார். இந்த வீடியோவை பகிர்ந்து ஆனந்த் மஹிந்திரா,"டோனி ஸ்டார்க் கொஞ்சம் நகரவும். உண்மையான அயன்மேன் வந்துவிட்டார். அவருக்கு வழிவிடுங்கள். இந்த மாணவர் மற்றும் அவரது உடன்பிறந்தவர்களின் கல்விக்கு உதவுவது ஒரு பாக்கியமாக இருக்கும். இவரை யாராவது என்னுடன் இணைத்தால் அவருக்கு நான் மற்றும் மஹிந்திரா கல்வி அறக்கட்டளை உதவ வசதியாக இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.

பிரேம்

இந்நிலையில், பிரேம் மஹிந்திரா அறக்கட்டளையின் மூலமாக பொறியியல் படித்துவருகிறார். தற்போதையை நிலையில் ஆனந்த் மஹிந்திரா பிரேம் பற்றிய சமீபத்திய தகவலை பகிர்ந்திருக்கிறார். அதில்,"உங்களில் பலருக்கு பிரேமின் கதை நினைவிருக்கலாம். அவர் இப்போது பொறியியல் மாணவராக இருக்கும் மஹிந்திரா பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான எங்கள் வாய்ப்பை அவர் ஏற்றுக்கொண்டபோது நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். கடந்த கோடையில் அவர் பிரதாப் போஸின் பயிற்சியின் கீழ் மஹிந்திராவின் ஆட்டோ டிசைன் ஸ்டுடியோவில் பயிற்சி பெற்றார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், பிரேம் பற்றி குறிப்பிட்ட அவர்,"பிரேம் மிகவும் வெற்றிகரமான கோடைகால இன்டர்ன்ஷிப்பைக் கொண்டிருப்பதாக பிரதாப் என்னிடம் கூறியபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். குறிப்பாக பிரேம் மேம்பட்ட கார் கதவு திறக்கும் வழிமுறைகளில் பணிபுரிந்திருக்கிறார். மிக முக்கியமான புதியதை உருவாக்குவது குறித்த பிரேமின் விருப்பத்தை பிரதாப் பாராட்டினார். அந்த கல்வி முறை நமக்கு அதிகம் தேவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவரின் கல்விக்கு மஹிந்திரா உதவி செய்த நிலையில், அவரை பாராட்டி அவர் செய்த பதிவு வைரலாக பரவி வருகிறது.

Also Read | "Dress வாங்கக்கூட எங்ககிட்ட பணம் இல்ல.. இப்போ நெனச்சாலும்".. வறுமையில் வாடிய நாட்களை நினைவுகூர்ந்த எலான் மஸ்க்கின் தாய்..!

ANAND MAHINDRA, IRON MAN, ANAND MAHINDRA TWEETS, YOUTH, TEEN, TEENAGER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்