செக்யூரிட்டி செஞ்ச சின்ன வேலை.. 7 கோடி ஓவியம் அவுட்.. ஆனந்த் மகேந்திரா கொடுத்த பலே ஐடியா

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முகத்தில் கண் இல்லை என கண்காட்சியின் பாதுகாவலர் செய்த காரியத்தால் சுமார்  இந்திய ரூபாய் மதிப்பில் 2,50,000 வரை செலவு வைத்துள்ள சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது.

Advertising
>
Advertising

எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு.. இப்போ எங்களுக்கு ஒரே 'ஆசை' தான்.. காதலர் தினத்தில் இணையும் திருநங்கை - திருநம்பி ஜோடி

ஒரு சிலருக்கு கையில் பேனா இருந்தால் ஏதாவது கிறுக்கி கொண்டே இருக்க வேண்டும் என தோன்றும். அதோடு ஒரு சிலருக்கு பணத்தில் இருக்கும் தலைவர்களின் படங்களுக்கு மீசை, பொட்டு, தொப்பி என மாறுவேட போட்டிக்கு தயார்படுத்துவது போன்ற செயல்களை எல்லாம் நாமும் செய்திருப்போம்.

அதேபோல பழக்கமுடைய ஒருவர் செய்த செயலால் சுமார் 2,50,000 லட்சம் வரை செலவாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஒரு கண்காட்சி அரங்கம். ரஷ்யா யெல்ட்சின் மையத்தில் சுமார் 932-1934 காலத்துக்கு இடையில் புகழ்பெற்ற அன்னா லெப்ரோஸ்யா என்கிற ஓவியரால் 'மூன்று உருவங்கள்' என்று பெயரிடப்பட்ட ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது. இதனை அந்த மையத்தில் கண்காட்சிக்காக வைத்துள்ளனர்.

கண்களை வரைந்த காவலர்:

அந்த ஓவியத்தின் சிறப்பே, அது எதனையும் குறிப்பாக வரையறுக்காது உருவங்கள், நிறம் போன்றவற்றை மட்டும் சொல்லும் Non-Objective வகையைச் சேர்ந்தது. மேலும், இந்த ஓவியம் புதிய கலையின் ஆரம்பம் என்றெல்லாம் ரசிகர்களால் புகழப்பட்ட ஒன்றாகும். அதோடு, இந்த ஓவியத்தில் மூன்று மனிதர்களின் உருவங்கள், முகத்தின் பாகங்களற்று இருக்கும். இந்த முக அம்சங்கள் இல்லாத ஓவியத்தை பார்த்த கண்காட்சியின் பாதுகாவலர், அந்த ஓவியத்தின் இரண்டு உருவங்களில், பால் பாயிண்ட் பேனாவால் இரண்டு கண்களை வரைந்துவிட்டார்.

ஓவியத்தின் மதிப்பு  7 கோடியே 49 லட்சம்:

இதுவரை இந்த ஓவியத்தின் உண்மையான மதிப்பு தெரியவில்லை. ஆனால் அந்த ஓவியம் காப்பீடு செய்யப்பட்ட தொகை மட்டுமே இந்திய மதிப்பில் ரூபாய் 7 கோடியே 49 லட்சம். பாதுகாவலர் செய்த இந்த தவறைக் கண்டறிந்த கண்காட்சி அதிகாரிகள் மறுநாளே இந்த ஓவியத்தை மாஸ்கோவிற்கு அனுப்பியுள்ளனர்

மேலும், அந்த ஓவியத்தின் பழமை மாறாமல் பால் பாய்ண்ட் அச்சுக்களை நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஓவிய கலை விமர்சகர்களுக்கு அழகாகவும், நிறைவாகவும் தெரிந்த இந்த படைப்பு, பாதுகாவலருக்கு அப்படி தோன்றவில்லை. என்னடா இது முகத்தில் 'ஏதோ குறையுதே' என அவர் நினைத்து செய்த செயல் தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் 2,50,000 வரை செலவாகும் எனக் கூறப்படுகிறது.

எதற்கு கவலைப்பட வேண்டும்?

இந்த சம்பவம் குறித்து மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 'எதற்கு கவலைப்பட வேண்டும். அந்த புதிய படைப்பை (கண்கள் வரையப்பட்ட பிறகான ஓவியம்) NFT ஆக மாற்றிவிடுங்கள்!' என சர்காஸ்டிக்காக பதிவிட்டுள்ளார்.

ஒரே ஒரு கிரிக்கெட் பந்தினால்.. ஒட்டுமொத்த ஊரிலும் வெடித்த கலவரம்.. புழுதி பறக்க நடந்த சண்டை

ANAND MAHINDRA, PAINTING, ஆனந்த் மகேந்திரா, ஓவியம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்