"End-ஏ கிடையாது".. இந்தியாவின் நீளமான ரயில்.. வீடியோவை பகிர்ந்து ஆனந்த் மஹிந்திரா போட்ட வைரல் Caption..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவின் நீளமான சரக்கு ரயில்
இந்தியாவின் நீளமான சரக்கு ரயிலான சூப்பர் வாசுகி சுதந்திர தின விழா அன்று தனது பயணத்தை துவங்கியது. 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ரயிலில் 6 எஞ்சின்கள் மற்றும் 295 பெட்டிகள் இருக்கின்றன. நிலக்கரியை சுமந்து செல்ல இந்த ரயில் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் அளித்திருக்கும் அறிக்கையில்,'இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்த ரயில் இயக்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 295 பெட்டிகளில் குமார் 27,000 டன் நிலக்கரியை இந்த ரயில் சுமந்து சென்றிருக்கிறது. சராசரியாக இந்த ரயில் ஒரு ரயில் நிலையத்தை கடக்க 4 நிமிடங்கள் பிடிக்கிறது. ஒரே முறையில் அதிக எரிபொருளை சுமந்து செல்லும் இந்திய போக்குவரத்து திட்டங்களில் முதலிடம் பிடித்திருக்கிறது சூப்பர் வாசுகி.
இந்த ரயில் திங்கள் கிழமை மதியம் 1.50 மணிக்கு சத்தீஸ்கரில் உள்ள கோர்பாவிலிருந்து புறப்பட்டு, நாக்பூரில் உள்ள ராஜ்நந்த்காவ் வரையிலான 267 கிமீ தூரத்தை கடக்க சுமார் 11.20 மணி நேரம் ஆனது.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
ஆனந்த் மஹிந்திரா இந்தியாவின் நீளமான சரக்கு ரயிலான சூப்பர் வாசுகியின் பயணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"அற்புதம். இந்தியாவின் வளர்ச்சிக் கதை போல. முடிவில்லாதது" எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் வாசுகி ரயிலின் இயக்கத்தை வீடியோவாக வெளியிட்டிருந்தார். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர்,"சூப்பர் வாசுகி, 6 லோகோக்கள் & 295 வேகன்கள் மற்றும் 25,962 டன் மொத்த எடை கொண்ட இந்தியாவின் மிக நீளமான (3.5 கிமீ) ரயிலின் இயக்கம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "Independence Day ஏன் இப்படி இருக்கு.? இவங்க கிட்ட கேளுங்க".. இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஆனந்த் மஹிந்த்ராவின் ட்வீட்.!
- "47 வருசத்துக்கு முன்னாடி ஆனந்த் மஹிந்திரா எடுத்த ஃபோட்டோ.. இந்த காலத்துக்கு கூட கனெக்ட் பண்ணி அவரு குடுத்த கேப்ஷன் தான் ஹைலைட்டே!!
- சத்தம் போட்டு சிரிச்ச ஆனந்த் மஹிந்திரா.. "அதுக்கு அவங்க மனைவி ரியாக்ஷன் இது தான்.." வைரலாகும் தொழிலதிபரின் 'ட்வீட்'
- "சில மரபுகள் எப்போவும் மாறாது".. ரக்ஷாபந்தனை முன்னிட்டு ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த சிறுவயது புகைப்படம்.. அந்த Caption தான் செம்ம..!
- "ஒரு பிரச்சனையில தீர்வு கண்டுபிடிக்கணும்னா இது ரொம்ப முக்கியம்".. ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்.. வைரலாகும் பதிவு..!
- தமிழ் பாடல் பின்னணியில்.. பட்டையை கிளப்பிய நெல்லை சிறுவன்.. அசந்து போய் வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா.. பின்னணி என்ன??
- "இவங்க 2 பேருக்குமே தங்கப்பதக்கம் கொடுக்கணும்".. பாகிஸ்தான் வீரரின் பதிவில் நீரஜ் சோப்ரா போட்ட கமெண்ட்.. நெகிழ்ந்துபோன ஆனந்த் மஹிந்திரா..!
- "Late பண்ணதுக்கு மன்னிச்சுடுங்க.." நெட்டிசனின் கமெண்ட்டிற்கு ஆனந்த் மஹிந்திராவின் வைரல் பதில்.. வியந்து போன நெட்டிசன்கள்
- ரோடு மேல இருந்த பெரிய குழி.. வியந்து போய் ஆனந்த் மஹிந்திரா கொடுத்த ரியாக்ஷன்.. "அப்படி என்ன அதுல இருக்கு??"
- "உங்க ஆசீர்வாதம் வேணும்.." தமிழர் போட்ட ட்வீட்.. மனதை வென்ற ஆனந்த் மஹிந்திராவின் 'Reply'!!.. வைரலாகும் பதிவு!