‘சார் நான் பொண்ணு இல்ல பையன்’.. அச்சச்சோ என்ன சொல்றீங்க.. மன்னிப்பு கேட்ட ஆனந்த் மஹிந்திரா.. சுவாரஸ்ய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கேரளா சிறுவனிடம் மன்னிப்பு கேட்ட சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நபர். இணையத்தில் வித்தியாசமான வீடியோவை கண்டால் அதை ட்விட்டரில் பதிவிட்டு தனது கருத்தை தெரிவிப்பார். அதேபோல் திறமையாளர்களை தேடி பாராட்டக் கூடியவர்.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது. அதனால் அந்த தொடரில் அறிமுக வீரர்களாக விளையாடிய இந்திய அணியின் நடராஜன், வாசிங்டன் சுந்தர், சர்துல் தாகூர், சைனி, முகமது சிராஜ், சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்களுக்கு கார் பரிசளித்தார். அதேபோல் சமீபத்தில் டோக்கியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கும் கார் பரிசளிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த களரி விளையாட்டு வீரரான நீலகண்டன் என்ற 10 வயது சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாராட்டு தெரிவித்திருந்தார். அந்த சிறுவன் நன்கு முடி வளர்த்து சிறுமி போல் இருந்ததால், ‘யாருப்பா இந்த பொண்ணு, அவரோட வழியில் யாரும் குறுக்கிட்டுறாதீங்க’  என பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்த சிறுவன், ‘உங்க பாராட்டு மற்றும் ஆதரவுக்கு ரொம்ப நன்றி சார். ஆனால் ஒரு சின்ன திருத்தம். நான் சிறுமி இல்லை, 10 வயது பையன். களரி தொடர்பான குறுப்படம் எடுப்பதற்காக முடி வளர்த்துள்ளேன்’ என கூறினார்.

சிறுவனின் இந்த பதிவைப் பார்த்த ஆனந்த் மஹிந்திரா உடனே மன்னிப்பு கேட்டார். அதில், ‘என்னுடைய தவறுக்கு ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனாலும் உங்களது திறமையை பாராட்டியதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இப்போதும் சொல்கிறேன், உங்கள் வழியில் யாரும் குறுக்கிட வேண்டாம் என்று. வாழ்த்துக்கள்’ என பதிலளித்தார். ஆனந்த் மஹிந்திரா இந்த பண்பு இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்