"நேரத்தை எப்படி Usefull-ஆ பயன்படுத்துறது?"..நெட்டிசனின் கேள்விக்கு ஆனந்த் மஹிந்திரா சொன்ன பலே பதில்.. வைரல் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா போட்டுள்ள ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

"நேரத்தை எப்படி Usefull-ஆ பயன்படுத்துறது?"..நெட்டிசனின் கேள்விக்கு ஆனந்த் மஹிந்திரா சொன்ன பலே பதில்.. வைரல் ட்வீட்..!
Advertising
>
Advertising

நேர மேலாண்மை (Time Management) இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கவேண்டிய அத்தியாவசிய திறமைகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பணியிடங்கள் தாண்டி அன்றாட வாழ்க்கையிலும் தங்களது நேரத்தை மக்கள் கவனமாக செலவிடவேண்டும் எனவும், தேவையற்ற, அனாவசிய விஷயங்களில் நேரத்தை செலவிடுவது வீண் அயர்ச்சியை கொடுக்கும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். சமகாலத்தில் நேர மேலாண்மை குறித்து பலரும் சிந்திக்கத் துவங்கிவிட்டனர். இந்நிலையில், நேர மேலாண்மை பற்றி ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் ஒருவருக்கு அளித்துள்ள பதில் தற்போது வைரலாகி வருகிறது.

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

நேரத்தை எப்படி பயன்படுத்துவது?

ட்விட்டரில் விக்ராந்த் என்பவர் ஆனந்த் மஹிந்திராவிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில்,"உங்களது நேரத்தை எப்படி மேலாண்மை செய்கிறீர்கள்? எனக்கு இந்நேரம் வரையிலும் அது புரியவே இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார் விக்ராந்த். இதற்கு  பதில் அளித்துள்ள ஆனந்த் மஹிந்திரா," கடந்த பல வருடங்களை பின்னோக்கி பார்க்கையில் நேரம் தான் என்னை நிர்வகித்து வந்திருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்வீட் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதுவரையில் ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்வீட்டினை ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். நெட்டிசன்கள் நேர மேலாண்மை குறித்த அவசியத்தையும், ஆனந்த் மஹிந்திராவின் பதில் குறித்தும் கமெண்டாக பதிவு செய்துவருகின்றனர்.

ANANDMAHINDRA, TIME, MANAGEMENT, ஆனந்த்மஹிந்திரா, நேரமேலாண்மை, ட்வீட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்