'டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு காரணம் என்ன?'... 'டெல்லி தேர்தல்'... 'சிறப்பு தொகுப்பு'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில், அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலை வகித்து வருகிறது. கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான காரணங்கள் அலசப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக காங்கிரஸ் கட்சி டெல்லியில் தோல்வியை சந்தித்தது எப்படி என்பதைப் பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

தேர்தல் வியூகம் வகுப்பதில் சரியான திட்டமிடுதலும், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் தலைமையும் இல்லாததே டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு பிரதானமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. தீவிரமாக பிரச்சாரம் செய்யாதது, தெளிவான கொள்கைகளை முன்வைக்காதது, வாக்காளர்களை ஈர்க்கும் தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைக்காதது என காங்கிரஸின் வீழ்ச்சிக்கான காரணங்கள் அடுக்கிக் கொண்டே செல்கின்றன.

டெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித்துக்குப் பின், வலிமையான மக்கள் செல்வாக்கு மிகுந்த ஒரு தலைவர், காங்கிரஸ் கட்சியில் உருவாகவில்லை. இது அந்த கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவாகும். காங்கிரஸ் கட்சிக்காக ராகுல் காந்தி நான்கு முறை தேர்தல் பிரச்சாரம் செய்த போதிலும், டெல்லி வாசிகளின் நம்பிக்கையை அறுவடை செய்ய அது போதுமானதாக அமையவில்லை. ஏனெனில், ராகுல் காந்தி காங்கிரஸின் தேசிய முகம். டெல்லியின் முகம் அல்ல.

தற்போது இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் உள்ள குறைபாடுகள், கோளாறுகள் குறித்த ஒருங்கிணைக்கப்பட்ட குரல் அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஒலிக்கவில்லை. வேட்பாளர்கள் என்ன தான் ஆளுங்கட்சியின் குறைபாடுகளை மக்கள் மத்தியில் அடுக்கினாலும், வசீகரமிக்க தலைவர் அவற்றை சொல்லும் போது, அதற்கு 'தனி பவர்'. அந்த பவர், காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் வாய்க்காமல் போனது.

மேலும், வலிமையற்ற கட்சியின் உள்கட்டமைப்பினால், மக்களைச் சென்றடைவதில் அக்கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.

CONGRESS, DELHI, ELECTIONS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்