'நியாயமான திருடன்...' 'மன்னிப்பு கடிதம் வேற...' 'இருந்தாலும்' அவங்க 'நிலைமை' அப்படி...
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தானில் வேலைப்பார்த்து வந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர், மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு, சைக்கிளை திருடிக்கொண்டு 250 கிலோமீட்டர் கடந்து சொந்த ஊர் திரும்பிய சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக போடப்பட்டுள்ள ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சிறப்பு ரயில், பேருந்து வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தனிமைப்படுத்திவிடுவார்கள் என அஞ்சி கால்நடையாக சொந்த ஊர் திரும்புவது தொடர்கதையாகி வருகிறது.
சிலர் லோடு லாரிகளில் மறைந்திருந்து சொந்த ஊர் செல்கின்றனர். பலர் நடந்தே தங்கள் ஊருக்கு செல்கின்றனர். சிலர் சைக்கிளில் பல நூறு கிலோ மீட்டர் கடந்து வீட்டை அடைகிறார்கள். நாட்டில் முதல் முறையாக நகரத்திலிருந்து கிராமத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக புலம்பெயர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ராஜஸ்தானில் வேலைப்பார்த்து வந்த முகமது இக்பால் என்ற புலம்பெயர் தொழிலாளி, பாரத்பூர் மாவட்டம் ராரா கிராமத்தில் வேலைபார்த்து வந்தார். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் வேலையிழந்து தவித்து வந்த அவர், சொந்த ஊர் செல்ல முயற்சித்து வந்தார். இதையடுத்து, அங்கு சாஹாப் சிங் என்பவரது வீட்டில் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிக் கொண்டு 250 கி.மீ தொலைவில் உள்ள சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் பரேலிக்கு சென்றுள்ளார்.
சைக்கிள் உரிமையாளருக்கு அவர் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “நான் ஒரு தொழிலாளி, உதவியற்றவன். உங்கள் சைக்கிளை எடுத்துக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். நான் சொந்த ஊரை அடைய வேறு வழியில்லை, எனக்கு ஒரு சிறப்பு திறன் கொண்ட குழந்தை உள்ளது. நான் பரேலிக்கு செல்ல வேண்டும்.” என கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கங்கை நதி என்றாலே கோயில் மட்டுமில்ல... இனிமே 'இது'க்காகவும் தான்!.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி திட்டம்!
- தமிழகம் முழுவதும் 'பேருந்து' எப்போது இயக்கப்படும்?... 'சென்னை'யின் நிலை என்ன?
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது!.. புதிய வடிவில் மேலும் சில சிக்கல்கள்!.. சுகாதாரத்துறை பரபரப்பு தகவல்!
- எல்லா நாடுகளும் உயிர் பொழச்சா போதும்னு இருக்கையில... ஒருவர் மட்டும் கொரோனாவுக்கு தண்ணி காட்டிட்டு இருக்காரு!.. என்ன நடக்கிறது வட கொரியாவில்?
- 'சீனாவுக்கு' எதிராக '18 அம்சத் திட்டம்...' 'அமெரிக்காவுடன்' கை கோர்க்கும் 'இந்தியா...' 'இந்தியாவுக்கு' அடிக்கப் போகும் 'ஜாக்பாட்...'
- கொரோனாவுக்கு மருந்து!.. சித்த மருத்துவர் திருதணிகாசலம் வழக்கில் திடீர் திருப்பம்!.. வெளியான பரபரப்பு தகவல்!.. காவல்துறை அதிர்ச்சி!
- "பிஸியாக இருந்த மனைவியின் போன்!"... 'குவாரண்டைன்' வார்டிலிருந்து தப்பிச் சென்று 'மனைவிக்கு' கணவர் 'கொடுத்த' கொடூர 'தண்டனை'!
- 'அவங்க சூப்பரா கொரோனாவை கண்ட்ரோல் பண்றாங்க...' 'அவங்க கூட சேர்ந்து மூலிகை மருந்து தயார் பண்ண நாங்க ரெடி...' உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு...!
- சென்னையில் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் ‘கட்டுப்பாடு’ தளர்வு.. லிஸ்ட்ல உங்க ‘ஏரியா’ இருக்கான்னு ‘ஷெக்’ பண்ணிக்கோங்க..!
- 'சல்லி சல்லியா நொறுங்கிய சோஷியல் டிஸ்டன்சிங்'... 'ஊரே கூடி நடத்திய திருவிழா'... அதிரவைக்கும் சம்பவம்!