85 வயசு மைசூரு மாப்பிள்ளைக்கு.. 65 வயசுல கிடைச்ச மணமகள் (மகாராணி).. சில்லு கருப்பட்டி போல் காதல் கதை

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகா:  மைசூரு அருகே 85 வயது தாத்தா 65 வயது பாட்டியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிகழ்வு சில்லு கருப்பட்டி பட காட்சியை நினைவுப்படுத்தியுள்ளது.

85 வயசு மைசூரு மாப்பிள்ளைக்கு.. 65 வயசுல கிடைச்ச மணமகள் (மகாராணி).. சில்லு கருப்பட்டி போல் காதல் கதை
Advertising
>
Advertising

சில்லுக் கருப்பட்டி பெயருக்கு ஏற்றார் போல் சின்ன சின்ன கருப்பட்டி துண்டுகளை சுவைப்பதை போல நான்கு குறும்படங்கள் இணைந்த ஒரு பெரும்படத்தை இயக்கியிருந்தார் ஹலிதா சமீம்.  உலகத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு, எல்லா வயதினருக்கும் எல்லா காலத்திலும் காதல் வருவது சாத்தியம. மனம் ஒத்துப்போனால் இளமை, முதுமை எல்லாம் ஒன்று தான்.  கர்நாடகா மாநிலம் மைசூரில் நடந்த ஒரு காதல் திருமணம் சில்லுக் கருப்பட்டி படத்தில் இடம்பெற்ற முதுமை காதல் காட்சிகளை ஞாபகப்படுத்துகின்றன.

An 85-year-old man who romantically married a 65-year-old Girl

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள உதயகிரி கவுசியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா ( 85). இவர் அதே பகுதியில் இறைச்சிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி குர்ஷித் பேகம், இவருடன் வசித்து வந்த நிலையில் இந்த தம்பதிக்கு 9 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் நடந்துவிட்ட நிலையில், தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

ஒன்றரை பவுன் நகைக்காக நடந்த கொடுமை.. பீரோவில் துணியால் சுற்றி கிடந்த உடல்.. பெண் பரபரப்பு வாக்குமூலம்!

தனிமை

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முஸ்தபாவின் மனைவி குர்ஷித் பேகம் இறந்து போனார். இந்நிலையில், 85 வயதில் தனிமையில் அவதிப்பட்டு வந்த முஸ்தபா, தனக்கு ஒரு துணை தேவை என உணர்ந்தார்.  இதையடுத்து அவர் அதே பகுதியில் தனிமையில் வசித்து வந்த பாத்திமா பேகம்(65) என்ற மூதாட்டியை சந்தித்தார். இருவரும் நட்புடன்  பழகி வந்தனர்.

காதல்

இந்நிலையில்,  முஸ்தபா தனது மனதில் உள்ள காதலை 'உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா' என்று, பாத்திமா பேகத்திடம் கேட்டுள்ளார். வயது முதிர்ந்த நிலையில், இந்த காதல் திருமணம் தேவையா என்று கிண்டல் செய்பவர்கள் உண்டு. ஆனால், தனிமையில் வாடும் நபரு, அன்பாய் ஆறுதலாய் ஒருவர் துணையாக இருந்தால் நல்லது தானே.

பாக்றதுக்கு எல்லாம் விலையில்லைங்கோ.. கார் ஷோருமில் சேல்ஸ்மேனை சினிமா பாணியில் அதிர வைத்த விவசாயி

திருமணம்

முஸ்தபாவின் காதலை பாத்திமா பேகமும் ஏற்றுகொண்டார். 85 வயதான தந்தை முஸ்தபாவின் திருமணத்திற்கு அவரது மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரக் குழந்தைகள் என அனைவரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். அவர்கள் முன்னிலையில், முஸ்தபா- பாத்திமா பேகம் திருமணம் நடைபெற்றது. கொரோனா என்பதால் வீட்டிலேயே எளிய முறையில் நடந்து முடிந்தது. தற்போது இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வாழ்த்துகளை பெற்றுள்ளது.

AN 85-YEAR-OLD MAN, ROMANTICALLY MARRIED A 65-YEAR-OLD GIRL, MYSORE, மைசூரு, காதல், திருமணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்