காங்கிரீட் குழாய்க்குள் ஹாயாக ரெஸ்ட் எடுத்த 'மலைப்பாம்பு'... '18 அடி' நீள பிரம்மாண்டம்... 'வௌவௌத்து' போன கிராம மக்கள்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒடிசாவில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த 18 அடி நீள மலைப்பாம்பைக் கண்டு வனத்துறையினரே ஆச்சரியப்பட்டனர்.

ஒடிசா மாநிலம் தென்கனல் மாவட்டத்தில், சப்தசஜ்யா என்ற ஊருக்குள் பாம்புகள் நுழைந்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற வனத்துறையினர் காங்கிரீட் குழாய்களுக்குள் ஒளிந்து கொண்டிருந்த 5 மலைப்பாம்புகளை மீட்டனர்.

மற்றொரு குழாயை ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்த வனத்துறையினர் உள்ளே பதுங்கியிருந்த பிரமாண்டமான மலைப்பாம்பினை மீட்டனர். அப்போதுதான் இறுதியாகப் பிடிக்கப்பட்ட பாம்பு சுமார் 18 அடி நீளம் இருந்தது தெரியவந்தது. இவ்வளவு நீள பாம்பு இப்பகுதியில் பார்ப்பது இதுவே முதல் முறை என வனத்துறையினர் தெரிவித்தனர். பிடிபட்ட அனைத்து பாம்புகளும் குமுர்தங்கார் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன.

PYTHON, ODISA, 18 FEET LONG, ENTERING RESIDENTIAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்