‘கடைசியா அப்பாவோட முகத்தை பார்க்கணும்’... ‘உருக்கமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு’... ‘உயிரிழந்த தந்தையை பார்க்கச் சென்ற மகள்’... 'களேபரத்தால் நிறைவேறாத ஆசை'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆணவக் கொலையில் தனது கணவரை இழந்த அம்ருதா ஜாமீனில் வெளியே வந்த தந்தை தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரை இறுதியாக பார்க்கச் சென்றபோது உறவினர்கள் பார்க்கவிடாமல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மிரயலகுடாவைச் சேர்ந்த பிரணய் என்ற 24 வயதான பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர், அதேப் பகுதியில் 200 கோடிக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மாருதி ராவின் மகள் அம்ருதாவை காதலித்தார். இவர்களது காதலுக்கு அம்ருதாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அதனை மீறி கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கர்ப்பமடைந்த அம்ருதா, மருத்துவப் பரிசோதனைக்காக கடந்த 2018-ம் செப்டம்பர் 14-ம் தேதி மருத்துவமனைக்கு வந்தபோது, மருத்துவமனை வாசலில், அவரது கண்முன்னே, கணவர் பிரணய் கூலிப்படையினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை விவகாரத்தில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், சகோதரர் ஷ்ரவன், சித்தாப்பா உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டனர். கணவரின் கொலைக்கு நீதிகேட்டு, பிரணயின் பெற்றோர் வீட்டிலேயே வாழ்ந்து வரும் அம்ருதா கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதற்கிடையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்த அம்ருதாவின் தந்தை, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில் கிடந்துள்ளார்.

இறப்பதற்கு முன்னர் கடிதத்தில் மனைவியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, ‘அம்ருதா, அம்மாவுடன் போய்விடும்மா’ என்று எழுதிவைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று தந்தையின் இறுதி காரியத்திற்கு முன்னர் அவரை ஒருமுறை பார்க்க விரும்பி, போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அம்ருதாவை, அவரது தாய், சகோதரர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்து அவரை உள்ளே விடாமல் களேபரம் செய்து தடுத்தனர். இதனால் தூரத்தில் இருந்து தனது தந்தையின் உடலைப் பார்த்த அம்ருதா, அங்கு பதற்றம் அதிகரிக்கவும் காரில் ஏறி வந்துவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அம்ருதா, ‘அவர் இன்னும் என்து அப்பா என்பதால், அவரை பார்க்க சென்றேன். கணவரை இழந்த எனது அம்மாவின் வலி எனக்கு புரிகிறது. ஆனால் எனக்கு இங்கே ஒரு குடும்பம் உள்ளது. எனத கணவரின் குடும்பத்தை விட்டு போக முடியாது. கணவரின் கொலை வழக்கு இன்னும் நடந்து கொண்டிருப்பதால், நான் இங்கே இருக்க வேண்டும். எனது அம்மா என்னுடன் இங்கே வந்து தங்க விரும்பினால், அவர்களை வரவேற்க தயாராக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். 

TELANGANA, CRIME, AMRUTHA, MARUTI RAO, SUICIDE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்