'சினிமா' கலைஞர்களுக்கு 'அமிதாப்பச்சன்' செய்யும் உதவி... '1 லட்சம்' குடும்பங்களுக்கு 'மளிகைப் பொருட்கள்...' 'பசி என்னும் நோய்க்கு மருந்து...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் வேலையின்றி தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உறுதி அளித்துள்ளார்.
கொரோனா உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசிய நிறுவனங்கள் தவிர மற்றவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், அதனை மட்டுமே நம்பியுள்ள சினிமா தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன், வி ஆர். ஒன் நிறுவனம், மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் உடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சம் சினிமா தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை அளிக்க உள்ளோம் என சோனி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த மிகப்பெரிய திட்டத்தின் கீழ், இந்தியாவின் முன்னணி ஹைப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளுடன் இணைந்து, அனைத்து இந்திய சினிமா தொழிலாளர் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் பார்கோடு உடன் கூடிய கூப்பன்கள் வழங்கப்படவுள்ளது.
மேலும் அவசர நிதியுதவி தேவைப்படும் தொழிலாளர்களுக்கு உதவி வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சோனி நிறுவனத்தின் சி.இ.ஓ , என்.பி.சிங் கூறுகையில், "சோனி பிக்சர்ஸ் நிறுவனம் அமிதாப்பச்சனுடன் இணைந்து தினக்கூலி அடிப்படையில் சினிமாத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை... 'நிலைகுலைந்த அமெரிக்கா...' ' நேற்று 'ஒரு நாளில்' மட்டும் '1,255 பேர்' பலி...
- புதிதாக '30 பேருக்கு' பாதிப்பு... கொரோனா தோன்றிய 'வுஹான்' நகரத்தை... குறைந்த 'அபாயப்பகுதியாக' அறிவித்த சீனா!
- 'கொரோனாவால்' தீவிர சிகிச்சை பிரிவில் 'அனுமதிக்கப்பட்ட' பிரதமர்... உருக்கமான 'பிரார்த்தனைகளை' முன்வைக்கும் மக்கள்!
- ‘டாக்டர்கள், கேரள செவிலியர்கள் உட்பட’... ‘மருத்துவ ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு’... ‘மும்பையில் 2 மருத்துவமனைகள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்’!
- இந்த 'ரெண்டே' விஷயம் தான்... கொரோனாவை கட்டுப்படுத்திட்டோம்... 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்த நாடு!
- 'இந்த' திட்டத்தின் கீழ் மக்கள்... தனியார் மருத்துவமனைகளில்... 'இலவச' கொரோனா சிகிச்சை பெறலாம்!
- 'சென்னையில் அதிகமாக கொரோனா பாதித்த பகுதி முதல்'... 'பாதிக்காத பகுதி வரை'... 'மண்டலம் வாரியாக வெளியான பட்டியல்'!
- ஊழியர்கள்' தான் எங்களோட சொத்து... அவங்க 'கஷ்டப்படுறதுக்கு' நாங்க விடமாட்டோம்!
- ஊரடங்கு உத்தரவால்... 'சென்னைக்கு' கிடைத்த மிகப்பெரிய 'நன்மை'... என்னன்னு பாருங்க!
- “இனி 30 நிமிஷத்துல கொரோனா ரிசல்ட்!”.. தயாராகும் 1 லட்சம் ராப்பிட் கொரோனா டெஸ்ட் கிட்”! .. பீலா ராஜேஷ் அதிரடி .. வீடியோ