‘ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு’.. ‘இனி எல்லாமே ஒரே அடையாள அட்டையில்’..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மக்களுக்கு ஆதார், ஓட்டுநர் உரிமம், வங்கிக்கணக்குகள் ஆகிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய குடியுரிமை அட்டையை வழங்க வேண்டுமென அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கமிஷனர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக நேற்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

பின்னர் விழாவில் பேசிய அமித் ஷா, “மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் மனித வளம், பொதுமக்களின் நிலை, கலாச்சாரம், பொருளாதார நிலவரம் ஆகியவற்றை அறிய முடிகிறது. இதை அறிவியல்பூர்வமான முறையில் மேற்கொள்ள வேண்டும். 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மொபைல் செயலி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான (என்.பி.ஆர்) தகவலும் இந்த கணக்கெடுப்பின்போதே சேகரிக்கப்படும். அதேபோல ஆதார், பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அனைத்து பயன்பாடுகளுக்கும் இனி ஒரே அடையாள அட்டையை நாம் ஏன் கொண்டு வரக் கூடாது? இது சாத்தியமான ஒன்று தான்” எனக் கூறியுள்ளார்.

AMITSHAH, PMMODI, BJP, ADHAR, PAN, VOTERID, DRIVINGLICENCE, PASSPORT, BANK, ACCOUNTS, NRP, CARD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்