'கத்துக்க மாட்டோம்னு சொல்லல'...'திணிக்காதிங்கன்னு தான் சொல்றோம்'...தெறிக்க விட்ட நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது தற்போது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்தநாள் வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக ஒருவார காலம் தொடர்ச்சியாக சேவை வாரமாக கொண்டாட பாஜக முடிவு செய்தது. இந்த சேவை வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாஜக தலைவர் அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தரையை சுத்தம் செய்தார்.

இதையடுத்து அவரது ட்விட்டரில் ‘'நாட்டில் அவரவர் தாய்மொழியையே பேசும் அதே நேரத்தில் இந்தியை அனைவரும் பயில வேண்டும். மக்கள் இந்தியில் பேசுவதற்கு பயில வேண்டும். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தி ஒரே மொழியாக இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். பல்வேறு மொழிகள் இந்தியாவில் இருந்தாலும் ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உண்டு’ என கூறியுள்ளார்.

இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாத மக்கள் அனைவரையும் ‘இரண்டாம் தர குடிமக்களாக்கும்’ முயற்சி இது எனவும், அதிகம் பேசப்படுவது இந்தி என்பதால் அதுதான் தேசிய மொழி என்றால், இந்தியாவில் அதிகம் பறக்கும் காக்கைதானே இந்தியாவின் தேசியப் பறவையாக இருந்திருக்க வேண்டும் என பேரறிஞர் அண்ணா கேட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து தற்போது ட்விட்டரில் பலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அவரது கருத்துக்கு கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

MKSTALIN, DMK, AMIT SHAH, HINDI IMPOSITION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்