"அமெரிக்காவுக்கு வர விருப்பமில்லை..." "இந்தியாதான் எங்களுக்கு சேஃப்..." 'அமெரிக்கா' செல்ல மறுக்கும் '24 ஆயிரம் அமெரிக்கர்கள்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை அழைத்து வர அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்தபோது, பெரும்பாலானோர் இந்தியாவில் இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளுக்கு சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை கண்டிராத மோசமான நிலையை அமெரிக்கா தற்போது சந்தித்து வருகிறது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களை அழைத்து வர அந்நாட்டு அரசு தனி விமானங்களை இயக்கி வருகிறது. சிறப்பு விமானங்கள் மூலமாக இதுவரை 50 ஆயிரம் பேர் அழைத்து வரப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை அழைத்துச் செல்ல அந்நாட்டு வெளியுறவுத்துறை சார்பில் தனி விமானம் அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் செல்வதற்காக இந்தியாவில் தங்கியிருக்கும் சுமார் 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்களில் 10 பேர் மட்டுமே அமெரிக்கா செல்ல ஒப்புக் கொண்டனர். மற்றவர்கள் தாங்கள் இந்தியாவிலேயே இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். சிலர் நிச்சயமற்ற மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அமெரிக்கர்கள் மட்டும் சுமார் 24 ஆயிரம் பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களை அமெரிக்க மற்றும் இந்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இனிமேல் குண்டர் சட்டம் தான்'...'இந்த மோசமான காரியத்தை செய்யாதீங்க'...காவல்துறை எச்சரிக்கை!
- 'மனைவி ஒருபக்கம்'...'சென்னையில் பரிதாபமாக இறந்த மருத்துவர்'...இறந்தும் அவதிப்படும் டாக்டரின் உடல்!
- உலகையே 'புரட்டி' போட்டுள்ள 'கொரோனா' வைரஸ்... 'எப்படி' உருவானது?... 'அமெரிக்கர்களின்' நம்பிக்கை 'இதுதான்'... வெளியாகியுள்ள 'ஆய்வு' முடிவு...
- தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! || மேலும் ரூ.1000 நிவாரணம் இவர்களுக்கும் மட்டும் - தமிழக முதல்வர் அறிவிப்பு! || பிரதமர் மோடி நாளை காலை நாட்டு மக்களுக்கு உரை!
- 'கொரோனா' பாதிப்பிலும் 'இனப் பாகுபாடு...' 'அமெரிக்காவில்' நிகழ்ந்து வரும் 'அவலம்'... 'தோலுரித்துக்' காட்டு 'நியூயார்க் டைம்ஸ்' கட்டுரை...
- 'நோயாளிகளால் நிரம்பி வழியும் 'அடையாறு புற்று நோய்' மருத்துவமனை'...இதுதான் காரணமா!
- கொரோனாவை பரப்ப சதி திட்டம்!?... சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு!... பதறியடித்து ஓடிய போலீஸார்!... என்ன நடந்தது?
- 'கொரோனா' ஆய்வுக் கட்டுரைகளை 'வெளியிட தடை... 'சீனா அரசு' எதை 'மறைக்கப்' பார்க்கிறது... 'உலக நாடுகள் சரமாரிக் கேள்வி...'
- கொரோனா எதிரொலி... பழைய மிக்சி, கிரைண்டருக்கு பதிலாக புதிது!... ஊரடங்கில் வித்தியாசமான உதவி!
- 'ஊரடங்கு' உத்தரவை நீட்டித்து 'தமிழக முதல்வர்' உத்தரவு ... எதற்கெல்லாம் அனுமதி?... விரிவான 'விளக்கம்' உள்ளே!