VIDEO: ‘குழந்தை உயிர காப்பாத்தணும்’.. 400 கிமீ தூரம், மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்.. பரபரப்பு நிமிடங்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இருதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மங்களூரில் இருந்து பெங்களூரு வரை ஆம்புலனஸ் செல்ல சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மங்களூரில் பிறந்து 40 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு திடீரென இருதய நோய் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் குழந்தையின் பெற்றோர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர்.

இதற்காக மங்களூரில் இருந்து பெங்களூரு வரை சுமார் 400 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆம்புலன்ஸ் செல்ல போக்குவரத்தை போலீசார் சீராக்கி கொடுத்துள்ளனர். சுமார் 4 மணிநேரம் 20 நிமிடம் எந்தவித போக்குவரத்து இடையூறு இல்லாமல் குழந்தையை சுமந்தவாறு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் பெங்களூரு சென்றது.

அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பதால் அதனை கட்டுப்படுத்திய பின்னர் மேல்சிகிச்சை அளிக்க இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் குழந்தையை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் தனக்கு ஊதியம் ஏதும் வேண்டாம் என மனிதாபிமானத்துடன் மறுத்துவிட்டார்.

BENGALURU, MANGALURU, TRAFFIC, HOSPITAL, BABY, AMBULANCE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்