பார்க்குறதுக்கு 'கைப்பிடி' அளவுக்கு தான் இருக்கு...! ஆனா 'அதுக்கு' பின்னாடி இவ்வளவு விசயங்களா...? - அதிர வைக்கும் பகீர் பின்னணி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மராட்டிய மாநிலம் மும்பையில் சுமார் ரூ.9 கோடி மதிப்புள்ள ஆம்பர்கிரீஸை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

திமிங்கலத்தின் வயிற்றில் உருவாகி அதனால் வெளியேற்றப்படும் மெழுகு போன்ற பொருள் தான் ஆம்பர்கிரீஸ் ஆகும். இது சில முக்கியமான நோய்களுக்கு மருந்து தயாரிக்கவும் மிக விலை உயர்ந்த வாசனை திரவியம் தயாரிக்கவும் ஆம்பர்கிரீஸ் பயன்படுத்தப்படுகிறது.

பார்ப்பதற்கு மெழுகு போன்று கைப்பிடி அளவிற்கு காணப்படும். ஆனால் இது உலகம் முழுவதும் சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ஆம்பர்கிரீஸின் விலை ரூ.1 கோடிக்கு விற்கப்படுவதால் அதற்கு மதிப்பு அதிகம். மும்பையில் சட்டவிரோதமாக 9 கிலோ ஆம்பர்கிரீஸ் வைத்திருந்த 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக கடற்கரையோரத்திலும் சில தினங்களுக்கு முன் ஆம்பர்கிரீஸ் கடத்தப்படுவதைக் கண்டறிந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்