தினமும் ஒரு ‘ஐபோன்’!.. 2 மாசத்துல மட்டும் இவ்ளோவா.. அதிரவைத்த ‘அமேசான்’ ஊழியர்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அமேசான் ஊழியர்கள் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் அமேசான் நிறுவனத்தின் குடோன் அமைந்துள்ளது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அமேசான் நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் அங்கிருந்து செல்போன்களை திருடியுள்ளனர்.

மொத்தம் 78 ஐபோன்களை திருடியுள்ளதாகவும், இதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதியை தவறாக பயன்படுத்தி இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த நிலையில் இரு ஊழியர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 38 ஐபோன்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 40 போன்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு ஐபோன் என இரண்டு மாதங்களாக இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்