'அமேசான் கிட்ட பெரிய பிளான் இருக்கு'... 'அவங்க வந்ததே மதம் மாத்துறதுக்கு தான்'... 'ஆர்எஸ்எஸ் (RSS)' பத்திரிகை சொன்ன பகீர் குற்றச்சாட்டு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கிழக்கிந்திய கம்பெனி போல மதம் மாற்றுவதுதான் அமேசானின் நோக்கம் என, ஆர்எஸ்எஸ் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான பாஞ்சன்யாயில் வெளியாகும் கட்டுரைகள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னர் இன்போசிஸ் நிறுவனத்தை வெளிநாட்டு உளவு நிறுவனம் என விமர்சித்து பாஞ்சன்யாயில் வெளியான கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன் தாக்கம் இன்னும் ஓயாத நிலையில், தற்போது அமேசான் நிறுவனத்தை கிழக்கிந்திய கம்பெனி 2.0 என தலைப்பிட்டு பாஞ்சன்யா இதழின் ஆசிரியர் குழு ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், ''இந்தியச் சந்தையை மொத்தமாகக் கைப்பற்றுவது தான் அமேசான் நிறுவனத்தின் பெரும் திட்டம். அதற்காக அமேசான் நிறுவனம் பல ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக அரசியல், பொருளாதார ரீதியாக இந்தியா உள்ளே நுழைந்து, பின்னர் தனிநபர் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலில் அமேசான் ஈடுபட்டுள்ளது. போலியான பெயர்களில் இணையத்தள நிறுவனங்களை உருவாக்கி, அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் வழங்கி தங்களுக்கு ஏற்ற வகையில் கொள்கைகளை வகுத்துக் கொள்வதில் அமேசான் நிறுவனம் கில்லாடி.

இந்தியாவுக்குள் நுழைந்த இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியக் கலாச்சாரத்தை படிப்படியாகச் சிதைத்து, பின்னர் மக்களை மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அதே பார்முலாவை தான் தற்போது அமேசான் பின்பற்றி வருகிறது. அதற்கு உதாரணமாக ஓடிடி தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமேசான், தனது பிரைம் வீடியோவில் தாண்டவ், பாதல் லோக் உள்ளிட்ட வீடியோ தொடர்களை வெளியிடுகிறது. இது இந்து மதத்திற்கு எதிரானது ஆகும்.

மேலும் மதம் மாற்றுவதற்காக 2 தன்னார்வ அமைப்புகளுக்கு அமேசான் நிறுவனம் நிதி வழங்கி வருவதாகவும்'' அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்