"எவ்வளவு அடிச்சாலும் தாங்குறேன்னு அடி பிண்றா ஐயா".. கதறிய கணவர்.. கலங்கிப்போன நீதிமன்றம்.. நீதிபதி போட்ட உத்தரவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனது மனைவி தன்னை கடுமையாக தாக்குவதாகவும் அதனால் தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கணவர் ஒருவர்.

"எவ்வளவு அடிச்சாலும் தாங்குறேன்னு அடி பிண்றா ஐயா".. கதறிய கணவர்.. கலங்கிப்போன நீதிமன்றம்.. நீதிபதி போட்ட உத்தரவு..!
Advertising
>
Advertising

தலைமை ஆசிரியர்

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் உள்ள பிவாடி நகரத்தைச் சேர்ந்தவர் அஜித் சிங் யாதவ். உள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்துவரும் அஜித், ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்த சுமன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில், தினமும் தன்னை தனது மனைவி அடித்து துன்புறுத்துவதாக நீதிமன்றத்தை நாடியுள்ளார் அஜித்.

Alwar woman thrashes principal husband in house

தாக்குதல்

ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்துவந்த சுமன் கொஞ்ச நாட்களிலேயே அதிகமாக கோபப்பட்டு தன்னை தாக்கத் துவங்கியதாக அஜித் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து கையில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு தன்னை தாக்கியதால் குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளில் மனைவி மீது காவல்துறையில் அஜித் புகாரளித்திருக்கிறார். ஆனால் போலீசார் தனது புகாரை நம்பவில்லை எனவும், அதனால் நீதிமன்றத்திற்கு செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார் அஜித்.

ஆதாரம்

தனது மனைவி தன்னை தாக்குவதாக நீதிமன்றத்தில் மனு அளிக்க முடிவுசெய்த அஜித் சிங், வீடு முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார். மனைவி தன்னை தாக்கும் வீடியோவை அஜித், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, அதனை பார்த்த நீதிபதி அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார். மேலும், தான் ஆசிரியர் பணியின் கண்ணியத்தை உணர்ந்து திரும்பித் தாக்கவில்லை எனவும், சட்டத்தை கையில் எடுப்பது தன்னை தவறான வழியில் கொண்டுசென்றுவிடும் என்பதால் நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாகவும் அஜித் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமை ஆசிரியர் அஜித் யாதவிற்கு பாதுகாப்பு அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் தனது மனைவி தினந்தோறும் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கணவர் உயர்நீதிமன்றம் வரையில் சென்றிருப்பது இந்தியா முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

RAJASTHAN, HUSBAND, WIFE, HIGHCOURT, ராஜஸ்தான், கணவன், மனைவி, நீதிமன்றம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்