‘கட்டிடப் பணி, ஹோட்டல், ஜவுளிக்கடைகளில் வேலை’.. அப்பாவிகள் போல் நடமாடிய நபர்கள்.. பாதாள அறையைக் கண்டு அதிர்ந்துபோன அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் நிறுவனங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தத் திட்டமிடுவதற்காக அல்கொய்தா பயங்கரவாதிகள் சதிசெய்து வருவதாக தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) உளவுத்தகவல்கள் கிடைத்தன.

இதன் அடிப்படையில் 18-ந் தேதி இரவு தொடங்கி 19-ந் தேதி காலை வரையில் கேரளாவில் எர்ணாகுளத்திலும், மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத்திலும் அதிரடி சோதனைகள் நடத்திய  என்.ஐ.ஏ. அதிகாரிகள் 6 பயங்கரவாதிகளை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், பணம், செல்போன் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இதில் கைது செய்யப்பட்ட முர்ஷிதாபாத்தில் கைது செய்யப்பட்ட நஜ்மஸ் சாகிப், அபு சுபியன் முல்லா, மைனுல் மொண்டல், லியு யீன் அகமது, அல் மாமுன் கமால், அதிதுர் ரகுமான் ஆகிய 6 பேரையும் கொல்கத்தா கோர்ட்டில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற காவலில் எடுத்து அதிகாரிகள் ரகசியமாக விசாரித்து வந்தபோது சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் கைதான அபு சுபியன் முல்லாவின் முர்ஷிதாபாத் ராணி நகர் வீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாதாள அறையில் பல டன் அளவு வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் பதுக்கி வைக்கும் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது.  இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் அறிவியல் மாணவரும் முர்ஷிதாபாத்தின் டோம்கால் பகுதியை சேர்ந்தவருமான மற்றொரு பயங்கரவாதியான நஜ்மஸ் சாகிப்க்கும் காஷ்மீரில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட 6 பயங்கரவாதிகளில் 4 பேரது வங்கி கணக்குகளில் சமீபத்தில் பெரிய பணத்தொகை பரிமாற்றங்கள் நடந்திருப்பதையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.\ கைதானவர்கள்  கட்டிட பணி, ஜவுளிக்கடை மற்றும் ஹோட்டல்களில் பணியாற்றிக் கொண்டே இந்த பணிகளை செய்துவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்