புஷ்பா - 2 ஷூட்டிங்குக்கு பிரேக்.. குடும்பத்துடன் புகழ் பெற்ற இந்திய காட்டில் அல்லு அர்ஜூன் சுற்றுலா!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.

Advertising
>
Advertising

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிரபல கிரிக்கெட் வீரர் மகள் தான் நடிகை ராதிகா பேத்தியா..! வைரலாகும் CUTE புகைப்படங்கள்!   

இவர் பான்-இந்திய திரைப்படமான 'புஷ்பா' படத்தில் நடித்து புகழ்பெற்றவர். இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  டிசம்பர் 17 ஆம் நாள் வெளியானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Images are subject to © copyright to their respective owners.

அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' திரைப்படம் உலகம் முழுவதும்  300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  2021 ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த படத்தை தயாரிப்பு தரப்பு அறிவித்தது.

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படக்குழு புஷ்பா படத்தின் அடுத்த பாகமான புஷ்பா தி ரூல் படத்தின் போஸ்டரை  வெளியிட்டு இருந்தது. 

மேலும் இந்த படத்தின் போட்டோ ஷூட்டிங்கும் சமீபத்தில் நடந்தது.  நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார், போஸ்டர் வடிவமைப்பாளர் டியூனி ஜான், போட்டோகிராபர் அவினாஷ் கவுரிகர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். தற்போது புஷ்பா - 2 படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் அல்லு அர்ஜூன், அடுத்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. அர்ஜூன் ரெட்டி இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் டி-சீரிஸ் புஷன் குமார் தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன், தமது குடும்பத்துடன் ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். ரந்தம்பூர் தேசிய பூங்காவில் குடும்பத்துடன் சவாரி செய்த வீடியோவை அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டி பகிர்ந்துள்ளார். மேலும் புகழ்பெற்ற Six Senses Fort Barwara  ஹோட்டலில் தங்கியிருக்கும் புகைப்படத்தையும் அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ளார்.

 

Also Read | " எனக்குன்னா உடனே அவுட் கொடுத்திருப்பாரு".. கோலியின் Thug Life சம்பவம்.. அம்பையரே சிரிச்சிட்டாரு😂.. வீடியோ..!

ALLU ARJUN, SNEHA REDDY, RAJASTHAN VACATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்