"எனக்கு அவ தான் வேணும்".. தோழியை திருமணம் செய்துகொண்ட பெண் வைத்த கோரிக்கை.. நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தங்களுடைய திருமணத்தை அங்கீகரிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றனர் ஒரு இளம் தம்பதியினர்.

"எனக்கு அவ தான் வேணும்".. தோழியை திருமணம் செய்துகொண்ட பெண் வைத்த கோரிக்கை.. நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!
Advertising
>
Advertising

ஹேபியஸ் கார்பஸ்

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அஞ்சு தேவி என்பவர் ஹேபியஸ் கார்பஸ் எனும் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தன்னுடைய 23 வயதான மகளை இன்னொரு இளம்பெண் ஒருவர் சிறைப்படுத்தி வைத்திருப்பதாகவும் அவளை மீட்டுத்தரும்படி குறிப்பிட்டிருந்தார்.

ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற இந்த விசாரணையில் பேசிய நீதிபதி சேகர் குமார் யாதவ் அடுத்தநாள் இரு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜராவதை உறுதிசெய்யும்படி மாநில அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

Allahabad HC rejects 2 women plea to recognise their marriage

திருமணம்

இதனை அடுத்து, இரண்டு பெண்களும் ஏப்ரல் 7 அன்று நீதிபதி சேகர் குமார் யாதவ் முன்னிலையில் ஆஜரானார்கள். அப்போது, தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் இந்த திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் எனவும் இளம் பெண்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், ஓரின திருமணங்களை அரசியலமைப்பு எதிர்க்கவில்லை எனவும் அந்த பெண்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கலாச்சாரம்

இந்த வழக்கில் இளம் பெண்களின் வாதத்தை ஏற்க மறுத்த மாநில வழக்கறிஞர்," இந்தியாவில் ஆண் மற்றும் பெண் இடையே நடைபெறுவது மட்டுமே திருமணம். அதுவே இந்தியாவின் கலாச்சாரமும். வெளிநாடுகளில் திருமணம் என்பது ஒப்பந்தமாக கருதப்படுகிறது. இந்தியாவில் மட்டுமே மத மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் திருமணங்கள் நடைபெறுகின்றன" என்றார்.

இதனை அடுத்து, நீதிபதி சேகர் குமார் யாதவ் அந்த இரு இளம்பெண்களின் கோரிக்கையை நிராகரித்ததுடன் தாயின் ஆட்கொணர்வு மனுவையும் தள்ளுபடி செய்தார். தோழியை திருமணம் செய்துகொண்ட பெண் தங்களது திருமணத்தை அங்கீகரிக்கும்படி நீதிமன்றத்தில் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சம்பவம் குறித்து பலரும் வைரலாக பேசிவருகின்றனர்.

COURT, MARRIAGE, ALLAHABAD, திருமணம், அலகாபாத், ஓரினதிருமணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்