'நீங்களும் இத பண்ணனும்'.. ஸிவா தோனி முன்வைக்கும் கோரிக்கைய பாருங்க.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜனநாயகக் கடமைகளுள் முக்கியமானதும் முதன்மையானதுமாக பார்க்கப்படும் ஒன்றுதான் வாக்குரிமை.

பொதுவாகவே வாக்களிக்கும் தமது உரிமையையும், கடமையையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நினைக்கும் பலரும், வெகுதூரம் சென்றாவது வாக்களிக்க முனைவதுண்டு. அதற்காக அலுவலக வேலைகளைத் தள்ளிவைத்துவிட்டு, வாக்களிக்கும் எண்ணத்தில் பயணங்களையும் மேற்கொள்வர்.

அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது இந்திய ஜனநாயக பொதுத் தேர்தல் என்பதால், இந்த தேர்தல்தான் பிரதமரை தீர்மானிக்கிறது என்பதால், அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தியத் துணைக்கண்டத்தின் பொருளாதாரச் சூழலை தீர்மானிக்கிறது என்பதால் இந்த தேர்தலில் தவறாமல் வாக்களிப்பதன் அவசியத்தை பலரும் உணருகின்றனர்.

அதனாலேயே திரைப்பிரபலங்களும், பெரும் பணக்காரர்களும், பிரபல வீரர்களும், தொழிலதிபர்களும், அரசியலாளர்களும் வாக்களிக்க நேரடியாக செல்கின்றனர்.  இந்த நிலையில் வட இந்தியாவில் 7 மாநில தேர்தல்கள் 7 கட்டமாக நடைபெற்றுவருகின்றன. இதில் 5-ஆம் கட்டமாக நடைபெறும் தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜவஹர் வித்யா மந்திர் பள்ளியில் கிரிக்கெட் வீரர் தோனி, அவரது தந்தை பான்சிங், தாய் தேவகி தேவி, மனைவி சாக்‌ஷி, மகள் ஸிவா உள்ளிட்டோர் சென்றனர். இதில் ஸிவாவைத் தவிர மற்ற அனைவரும் வாக்களித்தனர்.

வாக்களிக்கும் வயதினை எட்டாத ஸிவாக்குட்டியோ, ஆள்காட்டி விரலில் ஓட்டு போட்ட மையுடன் அமர்ந்திருக்கும் தோனியின் அருகில் நின்றுகொண்டு ‘என் அப்பா, அம்மாவைப் போல எல்லாரும் சென்று ஓட்டுப் போடுங்கள்’ என்று வலியுறுத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MSDHONI, LOKSABHAELECTIONS2019, ELECTIONS, ZIVA, VIRALVIDEOS, VIDEOVIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்