ரெண்டு பேர் ‘ட்வீட்’-ம் ஒரே மாதிரி இருக்கு.. வைரலாகும் சாய்னா நேவால், அக்‌ஷய் குமார் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

விவசாயிகள் போராட்டம் உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் நடிகர் அக்‌ஷய் குமார் ஒரே மாதிரி ட்வீட் செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரெண்டு பேர் ‘ட்வீட்’-ம் ஒரே மாதிரி இருக்கு.. வைரலாகும் சாய்னா நேவால், அக்‌ஷய் குமார் ட்வீட்..!

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஆயிரக்கணகான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இது இந்திய முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் விவசாயிகள் போராட்டம் நடத்திய பகுதிகளில் இண்டெர்நெட் சேவை துண்டிக்கப்பட்டு, மீண்டும் அளிக்கப்பட்டது.

Akshay Kumar-Saina Nehwal same India Together tweet goes viral

இந்த நிலையில் நேற்று உலக புகழ் பெற்ற அமெரிக்க பாப் பாடகி ரிஹன்னா விவசாயிகள் போரட்டத்துக்கு ஆதரவாக, ‘நாம் ஏன் இவர்களை பற்றி பேசவில்லை?’ என கேள்வி எழுப்பி ட்வீட் செய்திருந்தார். இவரது ட்வீட்டுக்கும் நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்தது. ரிஹன்னா பதிவுக்கு நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அதேபோல் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ட்விட் செய்தார். இதனால் சர்வதேச அளவில் விவசாயிகள் போராட்டம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ‘எங்கள் உள் நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்’ என இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரஹானே, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீர்ரகள் #IndiaTogether என்னும் ஹேஸ்டேக்கை பதிவிட்டனர்.

இந்த நிலையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆகிய இருவரும்  #IndiaTogether என்னும் ஹேஸ்டேக் உடன் ஒரே மாதிரி ட்வீட் செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்