'ஓஹோ அவ்வளவு தைரியமா?... 'பணத்தை கட்டுறீங்களா, இல்ல'... ' பரபரப்பான ஏர்டெல்'... சுழன்ற அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாதொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடி நிலுவை தொகையை அரசுக்கு இன்று செலுத்தியுள்ளது. அரசின் இந்த அதிரடி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை நள்ளிரவுக்குள் செலுத்துமாறு கடந்த 14ந்தேதி மத்திய அரசின் தொலை தொடர்பு துறை அதிரடியாக உத்தரவிட்டது. இதனை அந்த நிறுவனங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த உத்தரவானது அக்டோபர் மாதம் 24-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டினால் பிறப்பிக்கப்பட்டது ஆகும்.
இந்நிலையில் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதிக்குள் உத்தரவை செயல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவை செயல்படுத்தவில்லை. அதற்கு காரணம் தொலை தொடர்பு துறை டெஸ்க் அதிகாரி ஒருவர் பிறப்பித்த உத்தரவு தான். அவர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு மாறாக, இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் அந்த தொகையை செலுத்துமாறு வலியுறுத்த வேண்டாம், செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டாம் என தெரிவித்திருந்தார்.
இதனிடையே சம்மந்தப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் நீதிபதி அருண் மிஷ்ரா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, இந்த உத்தரவு (சுற்றறிக்கை) சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு வந்தது. டெஸ்க் அதிகாரி பிறப்பித்த உத்தரவை அறிந்து கடும் கோபமடைந்த நீதிபதி, ''இந்த முட்டாள்தனமான செயலுக்கு பின்னால் உள்ள டெஸ்க் அதிகாரி தன்னை சுப்ரீம் கோர்ட்டு என்று கருதுகிறாரா?
இது முற்றிலும் அவமதிப்பு.இந்த உத்தரவை உங்கள் டெஸ்க் அதிகாரி அடுத்த ஒரு மணி நேரத்தில் அல்லது 30 நிமிடங்களில் திரும்பப்பெற வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர் இன்றைக்கே சிறைக்கு போக வேண்டியது வரும். உடனடியாக அதை திரும்பப்பெறுங்கள். அவர் இங்கே வர வேண்டும். என கோபத்துடன் கூறினார்.
இதையடுத்து விரைவாக செயல்பட்ட தொலைத்தொடர்பு துறை, சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம், உரிம கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணம் ஆகியவை உள்பட ரூ.35 ஆயிரத்து 586 கோடி தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் என தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் இன்று ரூ.10 ஆயிரம் கோடியை இன்று அரசிடம் செலுத்தி உள்ளது. இதுதவிர்த்து மீதமுள்ள தொகையை தன்மதிப்பீட்டுக்கு பின் வழங்குவோம் என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ரூ. 1.47 லட்சம் கோடி அபராதம்’!.. ‘பணத்தை நைட்டு 12 மணிக்குள்ள கட்டணும்’.. பிரபல நிறுவனங்களுக்கு ‘செக்’ வைத்த மத்திய அரசு..!
- கூடுதலாக ‘50 நாட்கள்’ வேலிடிட்டி... ‘அதிரடி’ சலுகையுடன் ‘பிரபல’ நிறுவனம் அறிவித்துள்ள ‘பிரீபெய்ட்’ பிளான்...
- 'விலையோ ரொம்ப கம்மி'... 'தினமும் 10 ஜிபி டேட்டா'... 'களத்தில் குதித்த பிரபல நிறுவனம்'...!
- குறைந்த விலையில் புதிய ‘அன்லிமிடெட்’ பிளான்... கூடுதல் ‘வேலிடிட்டி’... ‘அசத்தல்’ ஆஃபர்களை அறிவித்துள்ள பிரபல நிறுவனம்...
- தினமும் ‘3 ஜிபி’ டேட்டா... ‘கூடுதலாக’ 71 நாட்கள் ‘வேலிடிட்டி'... ‘பிரபல' நிறுவனத்தின் ‘அசத்தல்’ ஆஃபர்...
- புத்தாண்டை முன்னிட்டு ‘அசத்தல்’ ஆஃபர்களை அறிவித்துள்ள ‘பிரபல’ நிறுவனம்... ‘மகிழ்ச்சியில்’ வாடிக்கையாளர்கள்...
- 129 ரூபாயில் இருந்து ‘அன்லிமிடட்’ பேக்குகள்!... 4 ‘அசத்தல்’ சலுகைகளை அறிமுகம் செய்துள்ள ‘பிரபல’ நிறுவனம்...
- ‘இத’ மட்டும் பண்ணா போதும்... ‘பிரபல’ நிறுவனத்தின் பழைய ‘கட்டணத்திலேயே’ தொடரலாம்... வெளியாகியுள்ள ‘புதிய’ தகவல்...
- இனி ‘2 நாட்களில்’ அதே நம்பருடன்... எந்த ‘நெட்வொர்க்கிற்கும்’ ஈஸியா மாறலாம்... விவரங்கள் உள்ளே...
- இனி ‘சிக்னல்’ இல்லாமலும் ‘போன்’ பேசலாம்... ‘அசத்தல்’ வசதியை அறிமுகப்படுத்தும் பிரபல நிறுவனம்...