Mobile Recharge கட்டணம் மீண்டும் உயரப்போகுது.. ஒரு யூசரிடம் ஏர்டெல் விரும்பும் தொகை என்ன தெரியுமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வர்த்தகப் போட்டியின் காரணமாக அதிகளவிலான வருமானத்தை இழந்துள்ள டெலிகாம் நிறுவனங்கள் அடுத்தடுத்துக் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இந்நிலையில், நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
பார்தி ஏர்டெல் டிசம்பர் காலாண்டில் கட்டண உயர்வு, கூகுள் முதலீடு ஆகியவற்றின் மூலம் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இதனால், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தது.

Advertising
>
Advertising

இந்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் உயர் மட்ட நிர்வாகம் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் டெலிகாம் சேவை திட்டங்களின் கட்டண உயர்வு அடுத்த மூன்று மற்றும் நான்கு மாதத்தில் இல்லையென்றாலும் கட்டாயம் 2022ஆம் ஆண்டில் கட்டண உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டண உயர்வு

முன்பு போல் ஏர்டெல் நிர்வாகம் கட்டணத்தை உயர்த்துவதில் எவ்விதமான தயக்கத்தைக் காட்டாது. சந்தையில் முதல் ஆளாகக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றாலும் தயங்காமல் உயர்த்தப்படும் எனப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் உயர் மட்ட நிர்வாகம் காலாண்டு முடிவுகளுக்குப் பின்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது முக்கிய இலக்கான 200 ரூபாய் ARPU அளவீட்டை 2022ஆம் ஆண்டுக்குள்ளேயே எட்டிவிடும் என நம்புகிறது.

அடுத்தக் கட்டண உயர்வு

ARPU என்பது ஒரு டெலிகாம் நிறுவனம் தனது மொத்த வாடிக்கையாளர்களிடம் இருந்து சராசரியாகப் பெறும் வருமானத்தின் அளவீடு ஆகும். பார்தி ஏர்டெல் நிறுவனம் டிசம்பர் காலாண்டில் மொத்த லாபத்தின் அளவு 3 சதவீதம் சரிந்து 830 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது, கடந்த நிதியாண்டில் இதன் அளவீடு 854 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் வருவாய் 13 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

காலாண்டு வருமானம்

டிசம்பர் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ARPU அளவு 163 ரூபாயாக இருக்கும் நிலையில் 2022 முடிவதற்குள் 200 ரூபாய் இலக்கை அடைய திட்டமிட்டுள்ளது. கூகுள் நிறுவனத்திடம் முதலீட்டை திரட்டிய பார்தி ஏர்டெல் கடன் பத்திரங்கள் வாயிலாக 7,500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்ட ஒப்புதல் பெற்றுள்ளது.

AIRTEL, NEW PLAN, AMOUNT INCREASE, AIRTEL NEW PLAN, BHARTI AIRTEL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்