என்ன இது...! 'நெட்' ரொம்ப நேரமா சுத்திக்கிட்டே இருக்கு...! 'அப்படினு ஃபீல் பண்றவங்களுக்காக...' - 'வேற லெவல்' அறிவிப்பை வெளியிட்ட ஏர்டெல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக நாடும் முழுவதும் பல மாநிலங்களில் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பலர் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி இருக்கின்றனர்.

அதே நேரத்தில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை செய்து முடிப்போரின் எண்ணிக்கை சமீபமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பு சேவைகளை வழங்கி வரும் பாரதி ஏர்டெல் நிறுவனம், தனது எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபரின் அதிவேக வைஃபை ரவுட்டர்களின் ஒரே கனக்ஷனில் சுமார் 60 டிவைஸ்களை இணைக்க முடியும் என்று அறிவித்துள்ளது.

வொர்க் ஃப்ரம் ஹோம், மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஊரடங்கு பொழுதுபோக்குடன் கழிக்க என ஒரே வீடுகளில் ஒரே நேரத்தில் 10 முதல் 12 டிவைஸ்களை பயன்படுத்தும் சூழல் நிலவி வருகிறது. 

ஒரு குடும்பத்திடம் அதிவேக ஃபைபர் பிராட்பேண்ட் கனக்ஷன் இருந்தாலும், மேற்கண்டவாறு ஒரே நேரத்தில் ஏராளமான டிவைஸ்களை ஸ்ட்ரீமிங் செய்வதால், வாடிக்கையாளர்களின் நெட் வேகம் குறைவாக இருக்கும். இதனால் அதிக நேரமாக buffer ஆகிக் கொண்டிருப்பது உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். வாடிக்கையாளர்களின் இந்த சிக்கலை தீர்ப்பதற்கு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ஒரே ஒரு FTTH (Fiber to the Home) கனெக்ஷன் மூலம் ஒரே நேரத்தில் 60 டிவைஸ்களை இணைக்க கூடிய அதிநவீன அதிவேக வைஃபை ரவுட்டர்களை பாரதி ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது அன்லிமிடட் டேட்டாவை அதிகபட்சம் 1Gbps வரையிலான வேகத்தில் வழங்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒரே நேரத்தில் 60 டிவைஸ்கள் வரை பயன்படுத்த கூடிய இந்த திட்டத்திற்கு மாதாந்திர கட்டணம் ரூ.3,999 என்று கூறியுள்ளது ஏர்டெல் நிறுவனம். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்