“பராமரிக்க பணம் இல்லை! அதனால விமான சேவையை ஸ்டாப் பன்றோம்னு அறிவித்த நிறுவனம்”!... அதிருப்தியடைந்த பயணிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா கடனில் சிக்கியுள்ளதால் அந்நிறுவனத்தின் விமானங்களை பராமரிக்க முடியாமல் பல விமானங்களை ரத்து செய்துள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 127 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளது. இவற்றில் சில விமானங்களை பழுது பார்க்க 1500 கோடி தேவைப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே இந்நிறுவனம் நிதி சிக்கலில் சிக்கியுள்ளது.

இதனையடுத்து, சர்வதேச விமான சேவையில் பயன்படுத்தி வந்த 20 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்தியுள்ளது. இந்த 20 விமானங்களில் 14 A320s ரக விமானங்களும், 4 போயிங் B787-800s ரக விமானங்களும், 2 போயிங் B777s ரக விமானங்களும் இதில் அடங்கும்.

மேலும், அண்மையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் பிரச்சனையால் சில விமானங்களை ரத்து செய்தது. இந்நிலையில், இந்த விமான போக்குவரத்து நிறுத்தம் சர்வதேச விமான பயனிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அண்மையில் ஏர் இந்தியா நிறுவனம், ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானங்களை குத்தகைக்கு கேட்டது.

இதனையடுத்து, பிற நிறுவன விமானங்களை குத்தகைக்கு எடுக்க முன்வந்த ஏர் இந்தியா நிறுவனத்தால் தங்களுடைய நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களை பராமரிக்க நிதியில்லையா என்று சர்வதேச விமான பயனிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

AIRINDIA, STOPPED, SERVICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்