கடைசி நேரத்தில் 10,000 அடி பறந்து... விபத்துக்கான 'காரணம்' இதுதான்... முதல்கட்ட தகவல் அறிக்கை வெளியானது!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு முதல்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின்  கீழ் துபாயில் இருந்து இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு இந்தியர்களை அழைத்துவந்த ஏர் இந்தியா விமானம் கடந்த வெள்ளியன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து முதல்கட்ட ஆய்வுகளின் அடிப்படையில் விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் அதில் விமானம் தரையிறங்க 28வது ஓடுதளம் ஒதுக்கப்பட்டதாகவும், கடைசி நேரத்தில் 10,000 அடி உயரம் பறந்து பின்னர் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு அனுமதி கிடைத்ததும் விமானி தரையிறங்க முயற்சித்ததாகவும் அப்படி தரையிறங்க முற்படும்போது ஓடுபாதையை விட்டு விமானம் விலகிச்சென்றதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தில் இருந்த கறுப்பு பெட்டியும் டெல்லியில் உள்ள விமான போக்குவரத்து இயக்குநரக அலுவலகத்தில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்