ஏங்க 'வாக்சின்' போட மாட்டேன்னு இப்படி 'அடம்' பிடிக்குறீங்க...? 'ஒத்தக்கால்ல நின்ன மனுஷன்...' 'ஆப்பு வைத்த நிறுவனம்...' - இப்போ போச்சா எல்லாம்...?!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ளாத விமானப்படை ஊழியர் ஒருவரை ஏன் பணி நீக்கம் செய்யக் கூடாது என அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அனைத்து அரசு அதிகாரிகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜாம்நகர் பிரிவில் விமானப்படையில் ஊழியராக பணியாற்றி வருபவர் யோகேந்தர் குமார். தற்போது மக்கள் சேவையில் பணியாற்றும் அனைத்து துறையினரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், யோகேந்தர் குமார் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் இல்லை என கூறியுள்ளார்.

அதோடு, தான் கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்காக ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொள்வதாகவும் மேலதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், யோகேந்தர் குமாரின் இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளாத அதிகாரிகள் ஏன் உங்களை நாங்கள் பணி நீக்கம் செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு யோகேந்தர் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இதனால் கடுப்பான யோகேந்தர் குமார், அதிகாரிகளின் இந்த பதில் கடிதத்தை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

தற்போது இந்த சம்பவம் வைரலாகியுள்ள நிலையில், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தேவாங்க் வியாஸ் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், 'இதுவரை இந்தியா முழுவதும் விமானப்படையைச் சேர்ந்த 9 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ளாதது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 9 பேர்களில் ஒருவர் மட்டும் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. அதனால் அவர் ஏற்கெனவே பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார்.

அதோடு விமானப்படையினர் கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயம் என்ற உத்தரவு உள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்