ஒமைக்ரான் தொற்று லேசானது தான்.. பெருசா ஆக்சிஜன் தேவை இருக்காது.. அறிவுறுத்திய எய்ம்ஸ் இயக்குனர்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒமைக்ரான் தொற்று லேசான ஒன்று தான் என்றும், அதற்கு அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்படாது என்றும், எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்று பரவல் குறைவாகி வந்தது. பல இடங்களில், மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் நிலையும் சிறிதாக.உருவானது.

இதனிடையே, கடந்த சில வாரங்களாக, கொரோனா தொற்றும், ஒமைக்ரான் தொற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது.

போட்டியை நிறுத்திய அஸ்வின்.. நடுவரை ரவுண்டு கட்டிய இந்திய வீரர்கள்.. என்ன நடந்தது?

அச்சுறுத்தும் ஒமைக்ரான்

குறிப்பாக, டெல்லி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்றின் பாதிப்பு, அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலையைப் போல, ஒமைக்ரான் தொற்றும், அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். அதே போல, ஆக்சிஜன் தட்டுப்பாடும், நாடெங்கும் நிலவும் என்ற அச்சமும் மக்களிடையே ஆரம்பித்துள்ளது.

பயப்படத் தேவையில்லை

இந்நிலையில், அதிகரித்து வரும் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து, விழிப்புணர்வு வீடியோவில், எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'நாட்டில் அதிகமான மக்கள், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி விட்டனர். இருந்த போதும், தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பொது மக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை  கடைப்பிடித்தும், கூட்டம் கூடாமல் தவிர்க்கவும் செய்தால் மட்டுமே, இந்த வைரஸில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

டிஆர் பாலு வீட்டுக்கு வந்த அதிமுக எம்பி.. டெல்லியில் ஒற்றுமையாக தமிழக எம்பிக்கள் செய்த சூப்பர் காரியம்

 

ஆக்சிஜன் தேவை இருக்காது

தற்போதுள்ள தரவுகளின் படி, ஒமைக்ரான் தொற்று, மிகவும் லேசான தொற்று நோய் தான். இரண்டாம் அலை சமயத்தில், தேவைப்பட்டது போன்ற ஆக்சிஜன் தேவை தற்சமயத்தில் இருக்காது. அதே போல, ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்துகளை சேமிப்பதை தவிர்க்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், தனிப்பட்ட ஒருவரின் நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தெரிந்து கொண்டு, ஒமைக்ரானை எதிர்கொள்ள, மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும்' என எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரந்தீப் குலேரியா, பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

AIMS, RANDEEP GULERIA, OMICRON, கொரோனா, தொற்று பரவல், ஒமைக்ரான்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்