சுஷாந்த் சிங் மரண வழக்கில் 'அதிரடி' திருப்பம்!.. 'உண்மையாவே அது 'சுஷாந்த்' எடுத்த முடிவு தானா'?.. எய்ம்ஸ் மருத்துவமனை 'பகீர்' ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு தொடர்பாக எய்ம்ஸ் தனது பிரேத பரிசோதனை மற்றும் உள்ளுறுப்பு மறு மதிப்பீடு அறிக்கையை சி.பி.ஐ வசம் சமர்ப்பித்தது.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில், எய்ம்ஸ் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மற்றும் உள்ளுறுப்பு அறிக்கையை மறு மதிப்பீடு செய்தும், மீதமுள்ள 20 சதவீத உள்ளுறுப்பு மாதிரியில் இருந்தும், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் சி.பி.ஐக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
இந்த எய்ம்ஸ் மறு மதீப்பீட்டு அறிக்கை ஒரு "உறுதியான முடிவு" ஆகும், இருந்தாலும் சி.பி.ஐ இதுவரை சேகரித்த ஆதாரங்களை ஆராய்ந்த பின்னரே இறுதி முடிவை எடுக்கும்.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவுக்கு தலைமை தாங்கிய டாக்டர் சுதிர் குப்தா கூறுகையில், இறுதியாக ஒரு முடிவுக்கு வரும் முன் ஆழ்ந்த ஆராய்தல் தேவை என்றார். "ஒரு தர்க்கரீதியான சட்ட முடிவுக்கு சில சட்ட அம்சங்களை ஆராய வேண்டிய அவசியம் உள்ளது" என்றும் அவர் கூறினார்.
சுஷாந்த் சிங் கொல்லப்பட்டாரா அல்லது அது தற்கொலை தானா என்று சி.பி.ஐ தம்மிடம் இருக்கும் மற்ற பல ஆதாரங்களுடன் பகுப்பாய்வு செய்து ஒரு முடிவுக்கு வரும்.
முன்னதாக, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்ப வழக்கறிஞர் விகாஸ் சிங், எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கையின்படி, நடிகரின் மரணத்திற்கு காரணம் "200% கழுத்தை நெரித்தல்" என்று கூறியிருந்தார். எனினும், டாக்டர் சுதிர் குப்தா இந்த கூற்றுக்களை "தவறானது" என்று குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு செப்டம்பர் 22 அன்று சுஷாந்த் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என முடிவு செய்யவிருந்தது. இருப்பினும், விசாரணை காரணமின்றி நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில் சுஷாந்த்தின் வழக்கறிஞர் விகாஸ் சிங், மரணத்திற்கான காரணம் குறித்து சி.பி.ஐ முடிவெடுப்பதில் ஏன் இவ்வளவு தாமதம், சி.பி.ஐயின் இந்த நிலை "விரக்தியை தருகிறது" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, "சுஷாந்த் மரணத்திற்கு பிறகு நான் எய்ம்ஸ் குழுவில் அங்கம் வகிக்கும் ஒரு மருத்துவருக்கு சுஷாந்த் இறந்த பிறகு எடுத்த புகைப்படங்களை அனுப்பியதற்கு அவர், இந்த மரணம் 200% கழுத்தை நெரித்து கொலை செய்தது. இது தற்கொலை அல்ல என்று சில நாட்களுக்கு முன்பே என்னிடம் சொன்னார்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 14 ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது மும்பை வீட்டில் இறந்து கிடந்தார். மும்பை காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் படியும், பிரேத பரிசோதனை அறிக்கையின்படியும் மரணத்திற்கான காரணம் தூக்குப்போட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுஷாந்த் மரண வழக்கின் கோணத்தை சரியாக விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவர்களுடன் சி.பி.ஐயின் (Special Investigation Team) சிறப்பு விசாரணைக் குழு நெருங்கிய தொடர்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தப்பான நட்பால வந்த அந்த பழக்கம்'... 'பிளைட் பிடிச்சு வந்து'... 'பாக்ஸிங் வீரர் ஊரில் பார்த்த வேலை'... 'வெளியான அதிரவைக்கும் பின்னணி!!!'...
- "கொரோனானு தான் கூட்டிட்டு போனாங்க"... 'இளம்பெண்ணை தேடியலைந்தபோது'... 'போலீசுக்கு வந்த ஒரு போன்'... 'அடுத்தடுத்து எவ்ளோ டிவிஸ்டு!!!'...
- 'டாஸ்மாக் கொள்ளையடிச்சு ஃப்ரண்ட்ஸ்க்கு பார்ட்டி...' 'ஸ்கூல்ல வேற லேப்டாப் திருட்டு போயிருக்கு...' '2-க்கும் இருந்த ஸ்பெஷல் கனெக்ட்...' - போலீசாரின் சாதுர்யம்...!
- 'மீனைப் போல மசாலா போட்டு சமையல்'... 'என்னவென உத்துப் பார்ப்பவர்களை'... 'அதிரவைக்கும் வீடியோ!'... 'வைரலானதால் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!'...
- 'ஏற்கெனவே 3 மனைவி, 4 குழந்தைங்க'... 'ஒரேயொரு விக்கை வெச்சு பதறவைத்த நபர்'... 'காணாமப்போன இளம்பெண்ண தேடினப்போ'... 'அடுத்தடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி!'...
- 'உங்கள கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே அவர எனக்கு தெரியும்'... 'ட்விஸ்டை எதிர்பாக்காத கணவன்'... மனைவியின் பேஸ்புக் நண்பருக்கு நடந்த விபரீதம்!
- 'விடாம மிரட்டுறாங்க'... 'ஒவ்வொரு நொடியும் பயமா இருக்கு'... 'பிரபல வீரரின் மனைவி கொடுத்த'... 'அதிர்ச்சி புகாரால் பெரும் பரபரப்பு!'...
- 'சக ஊழியருடன் ஏற்பட்ட சண்டையால்'... 'மதுபோதையில் காருக்குள் வைத்து'... 'ஆண் செய்த பகீர் காரியம்'... 'மிரளவைக்கும் சம்பவம்!'...
- 'இதுக்குனே தனியா ஒரு கால் சென்டர்'... 'இவங்களா 6 கோடிய அடிச்சிருக்காங்க?'... 'பையன் வயசைக் கேட்டு ஆடிப்போன போலீசார்'... 'வெளியான பகீர் பின்னணி!'...
- '15 பாலிவுட் ஸ்டார்களின் பெயர்களை'... 'NCBயிடம் வெளியிட்ட ரியா'... 'போதைப்பொருள் வழக்கில் தொடர்ந்து வெளிவரும்'... 'திடுக்கிடும் தகவல்களால் அதிர்ச்சி!'...