கொரோனா '3-வது அலை' எப்படிங்க இருக்க போகுது...? 'ரெண்டு தடுப்பூசி' மாத்தி போட்டுக்கலாமா...? - பதில் அளித்த எய்ம்ஸ் இயக்குனர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரசிற்கு எதிராக இரு மாறுபட்ட தடுப்பூசிகளை போட்டு கொள்வதை பற்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
நேற்று ஆங்கில செய்தி நிறுவனம் கொரோனா வைரஸ் குறித்தும், தடுப்பூசி செலுத்துவது குறித்தும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா பேட்டி அளித்துள்ளார்.
அதில் கொரோனா நோய் தடுப்புக்கு மாறுபட்ட 2 தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது நல்லதா? என்ற கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்துள்ளார்.
'இந்தியாவில் தற்போது டெல்டா, டெல்டா பிளஸ் போன்ற மாறுபட்ட கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
இதற்கு முன் தொற்று நோய்களுக்கு மாறுபட்ட 2 தடுப்பூசிகளை போடும் நடைமுறை உள்ளது. முதலில் போடும் ஊசி தொடக்க ஊசியாகவும், 2-வது ஊசியை செயல்திறன் ஊக்குவிப்பாகவும் போட்டுக்கொள்ளலாம்.
முன்பு, எபோலா வைரஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு உள்ளது.
தற்போது பரவி வரும் தற்போது கொரோனா நோய் தடுப்புக்கும் இதுபோன்ற சோதனையை பல நாடுகள் அனுமதித்து உள்ளன.
டெல்டா, டெல்டா பிளஸ் போன்ற மாறுபட்ட கொரோனா தொற்றை எதிர்த்து போராட 2 கலப்பு ஊசிகள் சாத்தியமானதாக இருக்கலாம்.
ஆனால் இதுவரை இரு வெவ்வேறு தடுப்பூசிகள் போட முடிவு எடுப்பதற்கு கூடுதல் தரவுகள் தேவை. அதோடு, இருவேறு ஊசிகளை பயன்படுத்தினால் அதிக பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது' எனக் கூறியுள்ளார்.
கூடுதலாக இந்தியாவில் டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுகள் 3-வது அலை உருவாகும் எனவும், இவ்வாறு உருவாகும் தொற்று 2-வது அலையை போன்று 3-வது அலை மிக கடுமையானதாக இருக்காது என்று கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் ஜூலை 5ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!.. புதிய தளர்வுகள் அறிவிப்பு!.. எவை இயங்கும்?.. எவை இயங்காது?.. முழு விவரம் உள்ளே
- 'இந்தியா உட்பட 85 நாடுகள்'... 'இத கண்டுக்காம விட்டா பெரிய ஆபத்து'... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
- 72 வயசு முதியவருக்கு... 10 மாசத்துல... 43 முறை கொரோனா பாசிட்டிவ்!.. என்ன நடக்குதுனே புரியாம திகைத்து நிற்கும் மருத்துவர்கள்!
- எத்தனை உருமாற்ற கொரோனா இன்னும் வரப்போகுது?.. எவ்வளவு அடிச்சாலும் தாங்குற மாதிரி... சர்வ வல்லமை பொருந்திய தடுப்பூசி வந்தாச்சு!
- சென்னையில் முதன்முதலாக 'டெல்டா ப்ளஸ்' கொரோனா...! 'ஒருத்தருக்கு இருக்குன்னு கன்ஃபார்ம் பண்ணியாச்சு...' - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்...!
- 'எங்க' தடுப்பூசி 92% வேலை செய்யுது...! ஆனா கண்டிப்பா '3 டோஸ்' போட்டாகணும்...! - ரெண்டாவது கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய நாடு...!
- 'இந்தியாவுக்கு அடுத்த தடுப்பூசி ரெடி'!.. இவ்வளவு நாட்கள் தாமதம் ஏன்'?.. ஃபைசர் நிறுவனத்துக்கு இருக்கும் 'ஒரே சிக்கல்'!
- ஃபேஸ்புக்ல பார்த்த 'ஒரு ஃபோட்டோ' வாழ்க்கையையே மாத்துமா...! 'என்னடா இனி பண்ண போறோம்னு சோர்ந்து போனவரு...' - இப்போ சும்மா பட்டைய கிளப்புறாரு...!
- நீங்க செய்த 'வேலைக்கு' நான் 'ஏதாவது' பண்ணியாகணுமே...! இந்த காலத்துல 'இப்படி' ஒரு நல்ல உள்ளமா...? 'நீங்க நல்லா இருக்கணும் சார்...' - இப்படி ஒரு 'சீட்டிங்' பார்த்ததே இல்லையே...!
- தமிழ்நாட்டில் ஜூன் 28ம் தேதி வரை... 'புதிய தளர்வுகளுடன்' ஊரடங்கு நீட்டிப்பு!.. எவை இயங்கும்?.. எவை இயங்காது?.. முழு விவரம் உள்ளே!