"இத விட என்ன பெரிய 'ஃகிப்ட்'ங்க... ஒருத்தரால 'Valentines Day' அன்னைக்கி குடுத்துட முடியும்??..." மெய்சிலிர்க்க வைத்த 'தம்பதி'... இதுதான்யா உண்மையான 'லவ்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய தினமான (பிப்ரவரி 14) உலகம் முழுவதிலும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தங்களது அன்புக்குரியவர்களை பல பரிசுகளைக் கொண்டும், அவர்களுக்கு பிடித்த தருணங்களைக் கொண்டும், அன்பை பொழிந்து தங்களது வாழ்த்துக்களை பகிர்வார்கள்.

இந்நிலையில், தனது மனைவிக்கு காதலர் தினத்தை முன்னிட்டு, கணவர் அளித்துள்ள மதிப்பில்லாத பரிசு ஒன்று, அனைவரையும் நெகிழ்ந்து போகும் படி செய்துள்ளது. அகமதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்பாய் படேல் (Vinodbhai Patel). இவரது மனைவி பெயர் ரீட்டாபென் படேல் (Ritaben Patel).

ரீட்டாபென் கடந்த மூன்று ஆண்டுகளாக, சிறுநீரக செயலிழப்பால் (Autoimmune kidney dysfunction) பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதற்காக, அவர் தொடர்ந்து சிகிச்சை மற்றும் மாத்திரைகளை எடுத்து வந்துள்ளார். நன்கு செயல்படும் கிட்னி இல்லாமல் ரீட்டா அவதிப்பட்டு வருவதால், அவரின் வாழ்நாள் முழுக்க, வாரத்திற்கு மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்யப்பட வேண்டிய நிலை இருந்தது. இப்படிப்பட்ட வேதனையான ஒரு சூழ்நிலையில், தனது மனைவியை தள்ளவும், பார்க்கவும் முடியாமல், கணவர் வினோத் பாய் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால், தனது மனைவி நீண்ட காலம் நிம்மதியாக வாழ்ந்திட வேண்டி, தனது ஒரு கிட்னியை, காதலர் தினத்தன்று ரீட்டாவிற்கு அளித்துள்ளார் வினோத்பாய். இதுகுறித்து அவர் கூறுகையில், 'இத்தனை ஆண்டுகளில் என்னுடைய எல்லா சூழ்நிலைகளிலும் அவள் என்னுடன் இருந்தாள். அப்படி இருக்கும் போது நான் மட்டும் எப்படி அவளை தனியே தவிக்க விட முடியும்?. இதனால், என்னுடைய ஒரு கிட்னியை அவளுக்கு தானம் செய்ய முடிவு செய்தேன். இதனை எனது கடமை என்றோ, காதல் என்றோ கூறலாம். அவள் எனது குடும்பத்தின் மிகவும் அன்பான, அக்கறையுள்ள ஒருவராக இருந்து வருகிறார்' என கூறியுள்ளார்.

இந்த மாற்று அறுவை சிகிச்சை, தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று நடைபெற்றது. அதுவும் அவர்களின் 23 ஆவது திருமண ஆண்டில், காதலர் தினத்தன்று நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான தகவல், சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இது தான் 'உண்மையான காதல்' என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். அதே போல, காதலர் தினத்தில் அளிக்கப்பட்ட சிறந்த பரிசு இது தான். தலை வணங்குகிறேன்' என்றும் பாராட்டுக்களை அளித்து வருகின்றனர்.

காதல் என்பது வெறும் பரிசுகளை மட்டும் பொழிவதல்ல. அதையும் தாண்டி, அதிக அன்பு செலுத்தி, அதிக அக்கறையுடன் ஒருவருக்கொருவர் இருப்பதும் ஆகும் என்பதை உணர்த்தியுள்ளது இந்த அழகான தம்பதி.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்