24 கேரட் தங்கத்துல ஸ்வீட்.. விலையை கேட்டு மார்க்கெட்டே கலகலத்து போயிடுச்சு..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேசத்தில் உள்ள இனிப்பகம் ஒன்றில் 24 கேரட் தங்கத்தினால் செய்யப்பட்ட ஸ்வீட்டை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளார்கள். இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "இவங்க எப்படி பாஸ் பண்ணாங்க-ன்னு தெரிஞ்சாகணும்".. மாணவர்கள் மீது ஜட்ஜ்க்கு வந்த சந்தேகம்.. விசாரணைல வெளிவந்த பகீர் தகவல்..!

ரக்ஷாபந்தன்

இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான பண்டிகைகள் கொண்டாப்படுக்கின்றன. அந்த வகையில் வட இந்தியாவில் மிகவும் பிரசித்திபெற்ற பண்டிகைகளில் ஒன்று தான் இந்த ரக்ஷாபந்தன். இந்த நாளில் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு வண்ண கயிறை கையில் கட்டுகின்றனர். இதனை ராக்கி என்று அழைக்கின்றனர். மேலும், மனதுக்கு நெருக்கமான ஆண்களை தங்களது சகோதரர்களாக பாவித்து அவர்களது கையிலும் இந்த ராக்கியை பெண்கள் கட்டுகின்றனர்.

கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் இனிப்புகள் வழங்கப்படுவது வழக்கம். இதற்காக முன்கூட்டியே ஆயத்த பணிகளை துவங்கி விடுகின்றனர் உள்ளூர் ஸ்வீட் கடை உரிமையாளர்கள். அப்படி இந்த வருடம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்வீட் கடை ஒன்று.

24 கேரட்

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது இந்த ஸ்வீட் ஸ்டால். வரும் ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு 'கோல்டன் கேவர்' என்னும் இனிப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். பெயரை போலவே, இந்த இனிப்பிலும் தங்கம் சேர்க்கப்படுகிறது. அதுவும் 24 கேரட் தூய தங்கம். இது உள்ளூர் மக்கள் பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.

கேவர் ராஜஸ்தான் மாநிலத்தின் பாராம்பரிய இனிப்பு வகையாக அறியப்படுகிறது. மைதா, நெய், சர்க்கரை பாகு மற்றும் சில உலர் பழங்கள் சேர்த்து செய்யப்பட்ட வட்ட வடிவமான இது பொதுவாக ரக்ஷாபந்தன் பண்டிகையின்போது அதிகம் செய்யப்படுகிறது.

விலை என்ன?

இந்த கோல்டன் கேவர் இனிப்பு ஒரு கிலோ 25,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேவர் இனிப்பின் மீது 24 கேரட் தங்க இழையை போர்த்தி பேக் செய்து விற்பனை செய்கிறார்கள் இந்த கடை உரிமையாளர்கள். இந்த கேவரை ருசிக்க, அங்குள்ள மக்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த இனிப்பின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.

Also Read | "சாக்லேட் சாப்டா போதும்.. 61 லட்சம் சம்பளம்.. வீட்ல இருந்துகூட வேலை பார்க்கலாம்".. நிறுவனம் வெளியிட்ட வித்தியாசமான அறிவிப்பு.. முழு விபரம்.!

UTTARPRADESH, AGRA SHOP, GOLDEN GHEVAR, RAKSHA BANDHAN, ரக்ஷாபந்தன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்