கட்டுன மஞ்சள் தாலி ஈரம் கூட காயல.. அன்னைக்கே மணமகள் எடுத்த முடிவு.. "எல்லா ரூமையும் லாக் பண்ணிட்டு.." நள்ளிரவில் நடந்த சம்பவம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமீப காலமாகவே, திருமண மேடையிலோ அல்லது திருமணம் நடைபெற்ற பிறகோ, நடைபெறும் சம்பவங்கள் பெரிய அளவில் வைரலாகி வந்த வண்ணம் உள்ளது.

கட்டுன மஞ்சள் தாலி ஈரம் கூட காயல.. அன்னைக்கே மணமகள் எடுத்த முடிவு.. "எல்லா ரூமையும் லாக் பண்ணிட்டு.." நள்ளிரவில் நடந்த சம்பவம்
Advertising
>
Advertising

சமீபத்தில் கூட, மாப்பிள்ளையை திருமண மேடையில் அறைந்து விட்டு, மணப்பெண் கீழே இறங்கி சென்று, பின்னர் திருமணம் நிகழ்ந்த சம்பவமும், வேறொரு இடத்தில் திருமணத்தில் விருப்பம் இல்லாமல், மேடையில் இருந்து மணமகள் வேகமாக இறங்கிச் சென்ற நிகழ்வும் நடந்து அதிக அளவில் பேசு பொருளாகி இருந்தது.

அந்த வகையில் தற்போது, திருமணம் முடிந்து மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவமும், மக்கள் மத்தியில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏழ்மையான குடும்பம்..

ஆக்ராவின் Shahganj என்னும் பகுதியில், கடந்த 25 ஆம் தேதியன்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. முன்னதாக, திருமணத்திற்கு இரண்டு மாதங்கள் முன்பு தான் இந்த திருமணத்தை இரு வீட்டாரும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. பெண்ணின் குடும்பம் சற்று ஏழ்மையான நிலையில் உள்ளது என்றும், அவர்களால் திருமணத்தை நடத்துவது கடினமான ஒன்றாக இருக்கும் என்றும் பெண் வீட்டார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால், இரு வீட்டாரின் திருமண செலவு முழுவதையும் மாப்பிள்ளையின் வீட்டாரே ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த 25 ஆம் தேதி, திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதன் பின்னர், 26 ஆம் தேதி காலையில் மாப்பிள்ளையின் வீட்டிற்கு அனைவரும் வந்து சேர்ந்துள்ளனர்.

நள்ளிரவில் நடந்த சம்பவம்..

இந்நிலையில் தான், மணப்பெண் செய்துள்ள காரியம் ஒன்று, பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கியுள்ளது. 26 ஆம் தேதி இரவு, சுமார் 12 மணியளவில் யாருக்கும் தெரியாமல் விழித்துக் கொண்ட மணப்பெண், நகைகளுடன் வீட்டின் சுவர் ஏறி குதித்து தப்பித்துச் சென்றுள்ளார். அது மட்டுமில்லாமல், அவர் தப்பித்துச் செல்வதற்கு முன்பாக, கணவர் மற்றும் மாமியார் அறையின் கதவினை வெளியே இருந்து தாழ்ப்பாள் போட்டு விட்டும் சென்றுள்ளார்.

வாட்ச்மேனை மிரட்டி இருக்காங்க..

தொடர்ந்து, புது மணப்பெண் காணவில்லை என்பதை மாப்பிள்ளை வீட்டார் அறிந்ததும், ஒரு நிமிடம் அனைவரும் திகைத்து போயினர். அதே போல, அந்த காலனியின் வாட்ச்மேனும், அந்த பெண் இரவில் தனியாக செல்வதை கவனித்து சந்தேகத்தில் கேள்வி கேட்டதாகவும், ஆனால் அந்த பெண்ணோ வாட்ச்மேனை மிரட்டி தப்பித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதன் பின்னர், மாப்பிள்ளை மற்றும் உறவினர்கள் அருகேயுள்ள பகுதிகளில் சென்று தேடியுள்ளனர். மேலும், போலீஸ் நிலையத்திலும் அவர்கள் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அவர்களும் காலனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலுள்ள சிசிடிவியைக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

திருமணம் ஆன மறுநாளே, நகையுடன் இளம்பெண் ஒருவர் தப்பித்துச் சென்றுள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

BRIDE, GROOM, MIDNIGHT, JEWELLERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்