அறிவிக்கப்பட்டது ‘அக்னிபாத் திட்டம்’.. வெடித்தது கலவரம்.. பற்றி எரிந்த ரயில் பெட்டிகள்.! இணைய சேவைகள் முடக்கம்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

ஓய்வூதியம், பாதுகாப்பு உள்ளிட்ட துறையில் ஏற்படும் செலவினங்களை குறைப்பதற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியதாக கூறப்படும் அக்னி பாத் திட்டத்தின்படி, இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் (ராணுவம், விமானப்படை, கடற்படை) 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்கள் 6 மாத கால பயிற்சிக்கு பின் பணியில் சேர்க்கப்படுவர்.

இத்திட்டத்தில் 17.5 வயது முதல் 21 வயதிலான ஆண், பெண் இருபாலரும் என்றும், இந்த வருடத்தில் இணைபவர்களுக்கு மட்டும் வயது வரம்பு 23 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடற்தகுதியை பொறுத்தவரை ராணுவத்தில் சேருவதற்கு இப்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உடற்தகுதிகளே தான் என்றாலும், கல்வித் தகுதியாக 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

இந்நிலையில் இந்த அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக, பீகார் மாநிலத்தில் தொடங்கி பிற மாநிலங்களுக்கு போராட்டம் பரவியுள்ளது, இது தொடர்பாக ஆங்காங்கே ரயில்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. 
பீகாரில் மட்டும் 50 ரயில் பெட்டிகள், 5 இஞ்சின்கள் முற்றிலுமாக எரிந்து, மொத்தமாக 200 கோடி ரூபாய்க்கான ரயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, பீகார் மாநிலத்தில் 12 மாவட்டங்களில் தற்காலிக இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுபோலவே ஹரியானா மாநில அரசும் இணையதள சேவை மற்றும் எஸ்.எம்.எஸ். சேவையை முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

AGNIPATH, AGNIPATHSCHEME, AGNIPATH PROTEST, ARMY, INDIANARMY, STUDENTS, BIHAR, BIHAR PROTEST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்