'இது பழசு சாரே'.. 'முடிஞ்சா இதுக்கு எதிரா கேஸ் போடுங்களேன்'.. பரபரப்பு ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அரசியல் பிரபலங்கள், முதல் மந்திரிகள் செல்லும் முக்கிய நாளன்று அவர்களின் வாகனங்கள் செல்லுகின்ற பாதைகளில் பாதுகாப்பு முதலானவற்றுக்கான ஏற்பாடுகள் எப்போதும் பலப்படுத்தப்பட்டிருக்கும்.

அதன் ஒரு முக்கிய நடவடிக்கையாக, அவர்கள் வரும் சாலையில் உள்ள சிக்னல்களில், வாகன ஓட்டிகளை அவ்வப்போது நிறுத்தி வைப்பதும் உண்டு. ஆனால் அவ்வாறு செய்வதை சில அரசியலாளர்களும், அரசு சார்ந்தவர்களுமே, தாங்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில், டெல்லியில் பாஜக எம்.பி. மனோஜ் திவாரி செல்வதற்காக, காவல்துறையினர், ஆம்புலன்ஸை நிறுத்தி வைத்ததாகவும், இதனிடையே ஆம்புலன்சில், ஒரு பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாகவும் வீடியோ ஒன்று வெளியானது.  மேலும் ஆம்புலன்ஸ் செல்ல அனுமதிக்கும்படி விடுத்த வேண்டுகோளை, காவல்துறையினர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இவை அனைத்தும் போலியானவை என்பதும், வெளியான அந்த வீடியோ கடந்த 2017-ஆம் வருடம் மலேசிய பிரதமர் செல்லும்போது நிகழ்ந்த நிகழ்வுகளை உள்ளடக்கியது என்பதும் ஆண்டி ஃபேக் நியூஸ் வார் ரூம் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ராகுல்காந்திக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்கும்படியான ட்வீட்டை மனோஜ் திவாரி பகிர்ந்துள்ளார். 

RAHULGANDHI, MANOJTIWARI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்