“பேஸ்புக் மீது எழுந்த இப்படி ஒரு குற்றச்சாட்டு!.. ‘அதிரடியாக’ பதவியை ‘ராஜினாமா’ செய்த முக்கிய ‘அதிகாரி’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வெறுப்பு கருத்துகளுக்கு தடை விதிப்பதில் முகநூல் நிறுவனம் பக்க சாய்வுடன் செயல்படுவதாக தொடர் குற்றப் புகார்கள் எழுந்ததை அடுத்து பொதுக் கொள்கை பிரிவின் தலைவர் அங்க்கி தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த வாரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு இது தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், பொதுக் கொள்கை பிரிவின் தலைவர் அங்க்கி தாஸ் இந்த முடிவை எடுத்துள்ளார். அதே சமயம் முகநூல் நிறுவனத்தின் இந்திய பிரிவு மேலாண் இயக்குநர் அஜித் மோகன் இதுகுறித்து பேசும்போது,  அங்க்கி தாஸ் பொது சேவையில் ஈடுபடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

2011-ல்  அங்க்கி தாஸ் பணியில் சேர்ந்த பிறகு, இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து அவர் பெருமிதமாக பேசியுள்ளதும்,  இவர் பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான பொதுக் கொள்கையின் இயக்குனராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்