“அவருக்கு கொரோனா இல்ல.. வந்து அழைச்சுட்டு போங்க!”.. 'நோயாளியின்' சடலத்தை 'புதைத்த' பின் 'மருத்துவமனையில்' இருந்து வந்த 'போன் கால்'!.. 'அதிர்ந்த' குடும்பம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த மே 28-ஆம் தேதி மூச்சுத்திணறல் பிரச்சனை வந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 71 வயதான தேவ்ராம் பிஸ்கர் என்கிற அவர் ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்.

Advertising
Advertising

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது மருமகனிடம் ஒப்புதல் கையெழுத்து பெறப்பட்டது. அதாவது சிகிச்சையின்போது அவருக்கு ஏதாவது நேர்ந்தால் மருத்துவமனை பொறுப்பேற்காது என்கிற ஒப்பந்தம்தான் அது. இந்த நிலையில் அங்கு சிகிச்சை மேற்கொண்டு வந்த அவருக்கு சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்ததாகவும் அப்போது மீண்டும் கையெழுத்து கேட்டபோது அவருடைய மருமகன் மறுத்து விட்டதாகவும் தெரிகிறது. அதன்பின்னர் தன்னுடைய மாமனாரை ஒருமுறை பார்ப்பதற்காக அனுமதி கேட்ட அவருக்கு அங்குள்ள செவிலியர் காணொளி மூலம் அழைப்பு விடுத்து அவருடைய மாமனாரை பார்க்க வைத்துள்ளார்.

அதன்பின்னர் ஆறுதல் அடைந்த மருமகன் அவருடைய மாமனாருக்கு, மேற்சிகிச்சை அளிப்பதற்காக, கையெழுத்துப் போட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார். பிறகு போனில் அழைத்த மருத்துவமனை நிர்வாகம் அவருடைய மாமனார் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளது. இதனை அறிந்து மருத்துவமனை விரைந்து சென்ற போது நீல நிற பாதுகாப்பு கவச உறைகளைக் கொண்டு அவருடைய உடல் முழுவதும் சுற்றப்பட்ட இருந்ததாகவும், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதற்கான எந்த விதமான ஆவணமும் தங்களிடம் தரப்படவில்லை என்றும் பிஸ்கரின் மருமகன் தெரிவித்துள்ளார்.

பின்னர் பிஸ்கரின் மனைவி மற்றும் மூன்று மகள்கள், இரண்டு மருமகன்கள் என அனைவரும் சேர்ந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று இறுதி சடங்குகளை செய்து முடித்தனர். அதன் பின்னர் மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் இருந்து மீண்டும் பிஸ்கரின் மருமகனுக்கு வந்த அழைப்பில், “உங்களுடைய மாமனாருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இல்லை. அவர் குணமடைந்து விட்டார். அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்” என்று தெரிவித்ததோடு, மேலும் அவரை வந்து அழைத்துச் செல்லும்படியும் அவர்கள் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ந்த பிஸ்கரின் மருமகன் உட்பட மொத்த குடும்பமும் குழப்பத்தில் ஆழ்ந்தது.

ஆனால் பிஸ்கர் உயிரிழந்ததற்கான எல்லா ஆதாரங்களும் மருத்துவமனை தரப்பிலிருந்து கொடுத்தபிறகும், வந்த இப்படியான அழைப்பு பற்றி பிஸ்கரின் குடும்பத்தினர் மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.  இதுகுறித்து அப்போதுதான் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஒரு புரிதல் கிடைத்தது. அதன்படி பிஸ்கரின் உடல் நிலையில் நோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் இருந்ததால், மருத்துவமனையில் இருந்து, குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றப்பட்டதாகவும், அங்குதான் அவருடைய மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாகவும், அவர் உயிரிழந்த பின்னர், அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்கிற சந்தேகத்தின் காரணமாக அவருடைய உடல் முழு பாதுகாப்பு கவச உடை கொண்டு பாதுகாக்கப்பட்டு அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சிவில் மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசிய மருத்துவமனையின் இன்னொரு மருத்துவர் பிஸ்கரின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்த போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்ததாகவும், எனவே அவரது குடும்பத்தினரை அழைத்து அவர் உடல் நலம் தேறி வருகிறார் என்று கொரோனா மையப் பிரிவு ஊழியர்கள் தெரிவித்ததாகவும், ஆனால் பிஸ்கர் கொரோனா பாதிப்பு இன்றி வேறு உடல்நல பாதிப்பால் உயிரிழந்து விட்டதால், கொரோனா பரிசோதனை முடிவுகளை குடும்பத்தினருக்கு தெரிவிக்கும் குழுவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, இது பற்றி தெரியாது என்றும் விளக்கியுள்ளார். எனினும் இந்த குழப்பங்களுக்கு மருத்துவமனை தரப்பில் இருந்து பிஸ்கரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பும் கேட்கப்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்