'எங்க அம்மாவ மனநலம் பாதிக்கப்பட்டவர்னு நினச்சு...' 'ட்ரீட்மெண்ட் பார்த்துருக்காங்க...' தூங்கியதால் தொலைந்து போன பாட்டிக்கு நடந்த சோகம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சென்னையில் இருந்து மதுரைக்கு சென்ற பாட்டி அசதியில் உறங்கியதால் கேரளத்தின் கொல்லம் பகுதியில் இறங்கியுள்ளார். மேலும் பாஷை தெரியாத மதுரை பாட்டியை மனநலம் பாதிக்கப்பட்டிருப்பவர் என நினைத்து 80 நாட்களாக அவருக்கு சிகிச்சையும் வழங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

Advertising
Advertising

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பொண்ணகரம் பகுதியை சேர்ந்த 70 வயதான கஸ்தூரி பாட்டி கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி சென்னையில் இருந்து மதுரை வர இரயிலில் எறியுள்ளார். மேலும் அசதியில் உறங்கிய பாட்டி எழுந்திருக்கும் போது கேரள மாநிலம் கொல்லத்தில் இரயில் நின்றுள்ளது.

ரயில் நிலையத்தில் இருந்த போலீஸ்காரரிடம் வழி கேட்ட பாட்டியின் பாஷை புரியாததால், அவரை மன நலம் பாதிக்கபட்டவர் என்று நினைத்து, கோழிக்கோடு மனநல மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். பாட்டியிடம் போன் இல்லாததால் மகளையும் தொடர்புக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவும் அமலுக்கு வந்தது.

கஸ்தூரி பாட்டியின் மகள் பிரியா என்பவர் தன் தாய் காணவில்லை என்று புகார் அளித்ததோடு, கடந்த 80 நாட்களாக தாயை காணாமல் தேடி அலைந்துள்ளார். கடைசியில் அவர் கேரளாவில்,  கோழிக்கோடு மனநல மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டிருப்பது தெரிய வந்தது.

கஸ்தூரி பாட்டியை மீட்க பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டும் முடியாததால் கடைசியில், மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அவர்களிடம் நடந்த அனைத்தையும் கூறி உதவி கேட்டுள்ளார். கஸ்தூரி பாட்டி மற்றும் பிரியாவின் நிலையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், பிரியா வழங்கிய மனுவின் அடிப்படையில் கோழிக்கோடு மாவட்ட ஆட்சியரை  உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கஸ்தூரி பாட்டியை மதுரை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

மதுரை ரெட் கிராஸ் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், முத்துக்குமார் ஆகியோரின் இலவச உதவியுடன் கோழிக்கோடு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கஸ்தூரி பாட்டியை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்து மதுரை ஆட்சியர் வினயிடம் ஒப்படைத்தனர்.

பாட்டிக்கு கொரோனா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பிறகு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஒரு சிறு கவனக்குறைவாலும் மொழி தெரியாததாலும் குடும்பத்தை விட்டு 80 நாட்கள் பிரிந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்